ஹட்டன் கல்வி வலயப் பிரிவிலுள்ள திபட்டன் தமிழ் வித்தியாலயத்தில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திபட்டன் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்களால் இன்று(22) காலை 8 மணிக்கு பாடசாலை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
திபட்டன் தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஒன்று முதல் 11 வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு முறையாக கல்வி கற்று கொடுக்க ஆசிரியர்கள் இல்லை என்று தெரிவித்து பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திபட்டன் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு முறையாக கல்வி கற்று கொடுக்க ஆசிரியர்கள் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆசிரியர் பற்றாக்குறைக்குறையை நிவர்த்தி செய்யுங்கள் - ஹட்டனில் ஆர்ப்பாட்டம் ஹட்டன் கல்வி வலயப் பிரிவிலுள்ள திபட்டன் தமிழ் வித்தியாலயத்தில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. திபட்டன் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்களால் இன்று(22) காலை 8 மணிக்கு பாடசாலை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. திபட்டன் தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஒன்று முதல் 11 வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு முறையாக கல்வி கற்று கொடுக்க ஆசிரியர்கள் இல்லை என்று தெரிவித்து பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். திபட்டன் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு முறையாக கல்வி கற்று கொடுக்க ஆசிரியர்கள் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.