• Jul 23 2025

மரக்கிளையில் தொங்கி நீருக்குள் தத்தளித்த பெண்; சுமார் 40 நிமிடங்களில் மீட்பு!

shanuja / Jul 22nd 2025, 12:31 pm
image

மிசோரியின் கன்சாஸ் நகரில் உள்ள இந்தியன் க்ரீக்  சிற்றோடையில் நீரிற்குள் சிக்கி பெண் ஒருவர் தத்தளித்துக் கொண்டிருந்த பெண் சுமார் 40 நிமிடங்களுக்குப் பின்னர் மீட்கப்பட்டார். 


அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தின்  கன்சாஸ் நகரில் உள்ள இந்தியன் க்ரீக் சிற்றோடையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 


மிசோரியின் கன்சாஸ் நகரில் உள்ள இந்தியன் க்ரீக் மிக வேகமாக நகரும் சிற்றோடை நதியாகும். இந்த சிற்றோடையில் பெண் ஒருவர்  சிக்கிக் கொண்டார். 


சிற்றோடையில் சிக்கிய பெண் நீரில் மூழ்காமல் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு மரக்கிளையைப் பிடித்துக்கொண்டு பல நிமிடங்களாகப் போராடியுள்ளார். 


நீரிற்குள் பெண் ஒருவர் தத்தளித்துக் கொண்டதை அவதானித்த சிலர், மிசோரியின் தீயணைப்புத் துறை  குழுவினர் 717 W. 101வது டெரஸுக்கு  தகவல் வழங்கி அவர்களை அழைத்தனர். 


சம்பவத்தையடுத்து கான்சஸ் இந்தியக் க்ரீக் சிற்றோடைக்கு விரைந்த தீயணைப்புத் துறை குழுவினர்,  கரையில் இருந்து 50 முதல் 75 அடி உயரத்தில் இருந்த பெண்ணை மீட்க, ஊதப்பட்ட படகை  ஏவினர்.


எனினும் சுமார் 40 நிமிடங்களுக்குப் பிறகு, குறித்த பெண்ணை படகில் மீட்டு கரைக்கு அழைத்துச் சென்றனர். மீட்கப்பட்ட பெண்ணிற்கு அங்கு காத்திருந்த ஆம்புலன்சில்  மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. 


சிசிக்சையின் பின்னர் குறித்த பெண் நலமாக உள்ளார் என்றும் தீயணைப்புத் துறைக் குழுவினர் தெரிவித்துள்ளனர். நீரிற்குள் தத்தளித்துக் கொண்டிருந்த பெண், தனது உயிரைக் காக்க மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

மரக்கிளையில் தொங்கி நீருக்குள் தத்தளித்த பெண்; சுமார் 40 நிமிடங்களில் மீட்பு மிசோரியின் கன்சாஸ் நகரில் உள்ள இந்தியன் க்ரீக்  சிற்றோடையில் நீரிற்குள் சிக்கி பெண் ஒருவர் தத்தளித்துக் கொண்டிருந்த பெண் சுமார் 40 நிமிடங்களுக்குப் பின்னர் மீட்கப்பட்டார். அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தின்  கன்சாஸ் நகரில் உள்ள இந்தியன் க்ரீக் சிற்றோடையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மிசோரியின் கன்சாஸ் நகரில் உள்ள இந்தியன் க்ரீக் மிக வேகமாக நகரும் சிற்றோடை நதியாகும். இந்த சிற்றோடையில் பெண் ஒருவர்  சிக்கிக் கொண்டார். சிற்றோடையில் சிக்கிய பெண் நீரில் மூழ்காமல் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு மரக்கிளையைப் பிடித்துக்கொண்டு பல நிமிடங்களாகப் போராடியுள்ளார். நீரிற்குள் பெண் ஒருவர் தத்தளித்துக் கொண்டதை அவதானித்த சிலர், மிசோரியின் தீயணைப்புத் துறை  குழுவினர் 717 W. 101வது டெரஸுக்கு  தகவல் வழங்கி அவர்களை அழைத்தனர். சம்பவத்தையடுத்து கான்சஸ் இந்தியக் க்ரீக் சிற்றோடைக்கு விரைந்த தீயணைப்புத் துறை குழுவினர்,  கரையில் இருந்து 50 முதல் 75 அடி உயரத்தில் இருந்த பெண்ணை மீட்க, ஊதப்பட்ட படகை  ஏவினர்.எனினும் சுமார் 40 நிமிடங்களுக்குப் பிறகு, குறித்த பெண்ணை படகில் மீட்டு கரைக்கு அழைத்துச் சென்றனர். மீட்கப்பட்ட பெண்ணிற்கு அங்கு காத்திருந்த ஆம்புலன்சில்  மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. சிசிக்சையின் பின்னர் குறித்த பெண் நலமாக உள்ளார் என்றும் தீயணைப்புத் துறைக் குழுவினர் தெரிவித்துள்ளனர். நீரிற்குள் தத்தளித்துக் கொண்டிருந்த பெண், தனது உயிரைக் காக்க மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement