• Apr 11 2026

சுரேஷ் சலேவை சிறைக்குள் வைத்து கொல்லச் சதி! – விமல் வீரவன்ச கடும் எச்சரிக்கை

Chithra / Mar 12th 2026, 7:54 am
image

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவை, சிறைக்கூண்டுக்குள் வைத்து கொலை செய்வதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று அக்கட்சியின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.

சுரேஷ் சலேவின் கைது முற்றிலும் அரசியல் பழிவாங்கலாகும். அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூண்டு மிகவும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது.

"எலிகள் ஓடித் திரியும், துப்பரவற்ற சிறைக்கூண்டில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். மலசலக்கூடத்திற்கு அருகிலேயே அவர் வைக்கப்பட்டுள்ளதால், அவரை நோயாளியாக்கி மெல்ல மெல்லக் கொல்ல அரசாங்கம் திட்டமிடுகிறது, என விமல் வீரவன்ச சாடினார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தாலும், இதுவரை நீதிமன்றத்தில் அவர் தொடர்பான முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த முறையற்ற செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைய வேண்டும் என விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

சுரேஷ் சலேவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி, கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபடத் தயாராக உள்ளோம். நாட்டு மக்கள் அனைவரும் இதில் கலந்துகொள்ள வேண்டும் என்றார்.

சுரேஷ் சலேவை சிறைக்குள் வைத்து கொல்லச் சதி – விமல் வீரவன்ச கடும் எச்சரிக்கை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவை, சிறைக்கூண்டுக்குள் வைத்து கொலை செய்வதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.நேற்று அக்கட்சியின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.சுரேஷ் சலேவின் கைது முற்றிலும் அரசியல் பழிவாங்கலாகும். அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூண்டு மிகவும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது."எலிகள் ஓடித் திரியும், துப்பரவற்ற சிறைக்கூண்டில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். மலசலக்கூடத்திற்கு அருகிலேயே அவர் வைக்கப்பட்டுள்ளதால், அவரை நோயாளியாக்கி மெல்ல மெல்லக் கொல்ல அரசாங்கம் திட்டமிடுகிறது, என விமல் வீரவன்ச சாடினார்.பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தாலும், இதுவரை நீதிமன்றத்தில் அவர் தொடர்பான முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.இந்த முறையற்ற செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைய வேண்டும் என விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார்.சுரேஷ் சலேவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி, கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபடத் தயாராக உள்ளோம். நாட்டு மக்கள் அனைவரும் இதில் கலந்துகொள்ள வேண்டும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement