• Dec 09 2024

சீறிப்பாய்ந்த முச்சக்கர வண்டி ; பரிதாபமாக பறிபோன உயிர்- மாத்தறையில் விபரீதம்

Sharmi / Aug 19th 2024, 9:52 am
image

திஹாகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹக்மன - மாத்தறை பிரதான வீதியின் புஹுல்வெல்ல பகுதியில் நேற்று(18) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹக்மனயிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியை சாரதி கட்டுப்படுத்த முடியாமல் எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளதுடன், மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 54 வயதுடைய திஹாகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஆகியோர் புகுல்வெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் மாத்தறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திஹாகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சீறிப்பாய்ந்த முச்சக்கர வண்டி ; பரிதாபமாக பறிபோன உயிர்- மாத்தறையில் விபரீதம் திஹாகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹக்மன - மாத்தறை பிரதான வீதியின் புஹுல்வெல்ல பகுதியில் நேற்று(18) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.ஹக்மனயிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியை சாரதி கட்டுப்படுத்த முடியாமல் எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளதுடன், மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் 54 வயதுடைய திஹாகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஆகியோர் புகுல்வெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.உயிரிழந்தவரின் சடலம் மாத்தறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திஹாகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement