• May 20 2024

தனிமையில் இருந்த மூதாட்டிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! samugammedia

Chithra / Jun 4th 2023, 4:52 pm
image

Advertisement

கெஸ்பேவ, படுவந்தர பகுதியில் டெங்கு நுளம்பு ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் போன்று வேடமணிந்து வந்த மூவர், வீடொன்றில் தனிமையில் இருந்த 73 வயதுடைய வயோதிப பெண்ணின் கை கால்களை கட்டிவிட்டு தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தில் சுமார் 13 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்க மோதிரங்கள், தங்க நெக்லஸ்கள், தங்க வளையல்கள் மற்றும் கைத்தொலைபேசியை சந்தேகநபர்கள் திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கைகளில் கோப்பு அட்டைகள் மற்றும் ஆவணங்களுடன், நல்ல நேர்த்தியான உடை அணிந்த மூவரும் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற வீட்டின் முன்பகுதியில் அமைந்துள்ள இரண்டு வீடுகளில் டெங்கு பரவும் அபாயம் உள்ளதா என அவதானிப்பதைப் போன்று நடித்துள்ளனர்.

இதன் பின்னர் மூதாட்டி இருந்த வீட்டிற்கு அவர்கள் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏனைய இரண்டு வீடுகளிலும் இரண்டு அல்லது மூன்று பேர் இருந்ததை அவதானித்த கொள்ளையர்கள் இந்த வீட்டிற்கு வந்து வயோதிப பெண்ணிடம் ஒரு குவளை தண்ணீர் கேட்டதாகவும், அதனை கொடுப்பதற்காக சமையல் அறைக்குள் நுழைந்த போது இந்த சம்பவத்தை நடத்தியுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தனிமையில் இருந்த மூதாட்டிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் samugammedia கெஸ்பேவ, படுவந்தர பகுதியில் டெங்கு நுளம்பு ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் போன்று வேடமணிந்து வந்த மூவர், வீடொன்றில் தனிமையில் இருந்த 73 வயதுடைய வயோதிப பெண்ணின் கை கால்களை கட்டிவிட்டு தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இந்த சம்பவத்தில் சுமார் 13 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்க மோதிரங்கள், தங்க நெக்லஸ்கள், தங்க வளையல்கள் மற்றும் கைத்தொலைபேசியை சந்தேகநபர்கள் திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.கைகளில் கோப்பு அட்டைகள் மற்றும் ஆவணங்களுடன், நல்ல நேர்த்தியான உடை அணிந்த மூவரும் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற வீட்டின் முன்பகுதியில் அமைந்துள்ள இரண்டு வீடுகளில் டெங்கு பரவும் அபாயம் உள்ளதா என அவதானிப்பதைப் போன்று நடித்துள்ளனர்.இதன் பின்னர் மூதாட்டி இருந்த வீட்டிற்கு அவர்கள் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஏனைய இரண்டு வீடுகளிலும் இரண்டு அல்லது மூன்று பேர் இருந்ததை அவதானித்த கொள்ளையர்கள் இந்த வீட்டிற்கு வந்து வயோதிப பெண்ணிடம் ஒரு குவளை தண்ணீர் கேட்டதாகவும், அதனை கொடுப்பதற்காக சமையல் அறைக்குள் நுழைந்த போது இந்த சம்பவத்தை நடத்தியுள்ளனர்.மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement