பாடசாலைக்கு நிரந்தர அதிபர் மற்றும் ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரி பாடசாலை மாணவர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை கவரவில்லை சிங்கள பாடசாலையில் நிரந்தர அதிபர் மற்றும் ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரி பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் இன்று(22) காலை சாமிமலை கவரவில்லை பிரதான வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ் ஆர்ப்பாட்டம் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இடம்பெற்றதுடன், மாணவர்களின் பெற்றோர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
அதிபர் தேவை, ஆசிரியர் தேவை ஹட்டன் வலய பணிப்பாளர் தூக்கமா என கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
குறித்த பாடசாலையில் 150 குறைவான மாணவர்கள் கல்வி பயில்வதுடன் எட்டு ஆசிரியர்கள் மாத்திரமே அப் பாடசாலையில் கடமை புரிகின்றனர்.
எனவே, குறித்த பாடசாலைக்கு நிரந்தர அதிபர் மற்றும் ஆசிரியர்கள் தேவை என கோரிக்கை முன்வைத்து பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
எட்டு ஆசிரியர்களுடன் இயங்கும் சிங்கள பாடசாலை. வீதியில் இறங்கிய மாணவர்கள். பாடசாலைக்கு நிரந்தர அதிபர் மற்றும் ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரி பாடசாலை மாணவர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை கவரவில்லை சிங்கள பாடசாலையில் நிரந்தர அதிபர் மற்றும் ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரி பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் இன்று(22) காலை சாமிமலை கவரவில்லை பிரதான வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இவ் ஆர்ப்பாட்டம் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இடம்பெற்றதுடன், மாணவர்களின் பெற்றோர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.அதிபர் தேவை, ஆசிரியர் தேவை ஹட்டன் வலய பணிப்பாளர் தூக்கமா என கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.குறித்த பாடசாலையில் 150 குறைவான மாணவர்கள் கல்வி பயில்வதுடன் எட்டு ஆசிரியர்கள் மாத்திரமே அப் பாடசாலையில் கடமை புரிகின்றனர்.எனவே, குறித்த பாடசாலைக்கு நிரந்தர அதிபர் மற்றும் ஆசிரியர்கள் தேவை என கோரிக்கை முன்வைத்து பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.