• Nov 10 2024

புது வருடத்தில் அரச பணியாளர்களுக்கு வெளியான விசேட அறிவித்தல்..!

Chithra / Dec 31st 2023, 9:52 am
image

 

புது வருட தொடக்கமான நாளை (01) அனைத்து அரச பணியாளர்களின் பங்கேற்புடன் உத்தியோகபூர்வ விழாவை தமது பணியிடங்களில் நடத்துமாறு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர், அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசியலமைப்பு சபையின் பிரதானிகளுக்கு சுற்றறிக்கை விடுத்து இந்த விடயம் அறிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரதான உத்தியோகபூர்வ வைபவம் நாளை முற்பகல் 09.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.

பொதுமக்களுக்கு வினைத்திறனுள்ள மற்றும் பயனுள்ள அரச சேவையை வழங்குவதற்கு முழு அரச சேவையும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்பதனால்,

தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரச நிறுவனங்களிலும் இந்நிகழ்வு நடத்தப்பட வேண்டுமென பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். 

அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் அரச சேவை உறுதிமொழியை உரத்த குரலில் உரைக்க வேண்டும் என அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புது வருடத்தில் அரச பணியாளர்களுக்கு வெளியான விசேட அறிவித்தல்.  புது வருட தொடக்கமான நாளை (01) அனைத்து அரச பணியாளர்களின் பங்கேற்புடன் உத்தியோகபூர்வ விழாவை தமது பணியிடங்களில் நடத்துமாறு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.பொது நிர்வாக அமைச்சின் செயலாளர், அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசியலமைப்பு சபையின் பிரதானிகளுக்கு சுற்றறிக்கை விடுத்து இந்த விடயம் அறிக்கப்பட்டுள்ளது.இதன் பிரதான உத்தியோகபூர்வ வைபவம் நாளை முற்பகல் 09.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.பொதுமக்களுக்கு வினைத்திறனுள்ள மற்றும் பயனுள்ள அரச சேவையை வழங்குவதற்கு முழு அரச சேவையும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்பதனால்,தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரச நிறுவனங்களிலும் இந்நிகழ்வு நடத்தப்பட வேண்டுமென பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் அரச சேவை உறுதிமொழியை உரத்த குரலில் உரைக்க வேண்டும் என அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement