புதிய கொவிட் 19 திரிபு குறித்து அடிமட்டத்தில் எந்தவொரு ஆராய்வும் செய்யப்படவில்லை. இருப்பினும், இந்த நாட்களில், சுவாசக் கோளாறுகள் உள்ள நோயாளிகள் அதிகரித்துள்ளனர் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
கொவிட் 19 தொற்று பரவல் தொடர்பில் அரசாங்கத்தின் கருத்து எதுவாக இருந்தாலும் மக்கள் தமது பாதுகாப்பு தொடர்பில் மிகுந்த அக்கறையுடன் இருக்க வேண்டும் என அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
உலகளவில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மற்றும் தனிநபர் இறப்புகள் மீண்டும் அதிகரித்துள்ளன.
இது தொடர்பில் அண்டை நாடான இந்தியா அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் தொற்றுநோய் பரவல் அதிகரித்துள்ளது.
புதிய கொவிட் 19 திரிபு குறித்து அடிமட்டத்தில் எந்தவொரு ஆராய்வும் செய்யப்படவில்லை. இருப்பினும், இந்த நாட்களில், சுவாசக் கோளாறுகள் உள்ள நோயாளிகள் அதிகரித்துள்ளனர்.
கொவிட் 19 தொற்று உள்ளவர்கள் என சந்தேகிக்கக்கூடிய பல நோயாளிகள் நாட்டில் காணப்படுகின்றனர். அதனால் புதிய திரிபு ஓரளவுக்கு நாட்டில் பரவி வருகிறது என்பது தெளிவாகிறது.
ஆகவே, எந்த ஒரு நபரும் ஆபத்தில்லை என்று சொல்ல முடியாது. இந்த விவகாரம் குறித்து அரசு தரப்பில் முறையான விசாரணை நடத்த வேண்டும். பின்னர் இதுகுறித்து சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எவ்வாறாயினும், பொதுமக்களும் இவ்விடயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுவதும் இந்த நேரத்தில் அவசியம். விமான நிலையத்தில் தனிமைப்படுத்தல் தொடர்பான எந்த செயல்முறையும் இல்லை.
அதனால் நாட்டுக்குள் தொற்றுநோய்கள் நுழைய வாய்ப்பு உள்ளது. எனவே அனைவரும் இது குறித்து கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் மீண்டும் தீவிரமடையும் கொவிட் தொற்று. மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை புதிய கொவிட் 19 திரிபு குறித்து அடிமட்டத்தில் எந்தவொரு ஆராய்வும் செய்யப்படவில்லை. இருப்பினும், இந்த நாட்களில், சுவாசக் கோளாறுகள் உள்ள நோயாளிகள் அதிகரித்துள்ளனர் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். கொவிட் 19 தொற்று பரவல் தொடர்பில் அரசாங்கத்தின் கருத்து எதுவாக இருந்தாலும் மக்கள் தமது பாதுகாப்பு தொடர்பில் மிகுந்த அக்கறையுடன் இருக்க வேண்டும் என அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.உலகளவில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மற்றும் தனிநபர் இறப்புகள் மீண்டும் அதிகரித்துள்ளன.புதிய கொவிட் 19 திரிபு இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதை விசேட நிபுணர்களுடன், சுகாதாரத் திணைக்களங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.இது தொடர்பில் அண்டை நாடான இந்தியா அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் தொற்றுநோய் பரவல் அதிகரித்துள்ளது.புதிய கொவிட் 19 திரிபு குறித்து அடிமட்டத்தில் எந்தவொரு ஆராய்வும் செய்யப்படவில்லை. இருப்பினும், இந்த நாட்களில், சுவாசக் கோளாறுகள் உள்ள நோயாளிகள் அதிகரித்துள்ளனர்.கொவிட் 19 தொற்று உள்ளவர்கள் என சந்தேகிக்கக்கூடிய பல நோயாளிகள் நாட்டில் காணப்படுகின்றனர். அதனால் புதிய திரிபு ஓரளவுக்கு நாட்டில் பரவி வருகிறது என்பது தெளிவாகிறது.ஆகவே, எந்த ஒரு நபரும் ஆபத்தில்லை என்று சொல்ல முடியாது. இந்த விவகாரம் குறித்து அரசு தரப்பில் முறையான விசாரணை நடத்த வேண்டும். பின்னர் இதுகுறித்து சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.எவ்வாறாயினும், பொதுமக்களும் இவ்விடயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுவதும் இந்த நேரத்தில் அவசியம். விமான நிலையத்தில் தனிமைப்படுத்தல் தொடர்பான எந்த செயல்முறையும் இல்லை.அதனால் நாட்டுக்குள் தொற்றுநோய்கள் நுழைய வாய்ப்பு உள்ளது. எனவே அனைவரும் இது குறித்து கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.