• Jun 26 2024

மாத்தறை சிறைச்சாலையில் மர்ம நோய் - மற்றுமொரு கைதியும் பலி..!

Chithra / Dec 31st 2023, 8:43 am
image

Advertisement

 

மாத்தறை சிறைச்சாலையில் மேலும் ஒரு கைதி உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மாத்தறை சிறைச்சாலை கைதிகள் மத்தியில் பரவிய மர்ம நோயினால் பாதிக்கப்பட்ட பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நோய் தாக்கம் காரணமாக ஏற்கனவே ஒருவர் உயிரிழந்திருந்தார்.

இந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இவ்வாறு சிகிச்சை பெற்று வந்த 53 வயதான கைதி ஒருவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சிறைச்சாலை கைதிகள் மத்தியில் பரவியது மூளை காய்ச்சல் என சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாத்தறை சிறைச்சாலையில் மர்ம நோய் - மற்றுமொரு கைதியும் பலி.  மாத்தறை சிறைச்சாலையில் மேலும் ஒரு கைதி உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.மாத்தறை சிறைச்சாலை கைதிகள் மத்தியில் பரவிய மர்ம நோயினால் பாதிக்கப்பட்ட பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.இந்த நோய் தாக்கம் காரணமாக ஏற்கனவே ஒருவர் உயிரிழந்திருந்தார்.இந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.இவ்வாறு சிகிச்சை பெற்று வந்த 53 வயதான கைதி ஒருவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.சிறைச்சாலை கைதிகள் மத்தியில் பரவியது மூளை காய்ச்சல் என சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement