• May 18 2024

கறுப்பு சுதந்திர தின எழுச்சிப் பேரணி ஏற்பாடு தொடர்பில் மட்டக்களப்பில் விசேட கலந்துரையாடல்!

Sharmi / Feb 3rd 2023, 1:14 pm
image

Advertisement

வடக்கில் வடகிழக்கு இணைந்த தமிழர் தாயக பகுதியில் முன்னெடுக்கப்படும் தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்து செயற்பாடுகளையும் கண்டித்தும் இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாள் என்பதனை வலியுறுத்தியும் வடகிழக்கு இணைந்ததாக முன்னெடுக்கப்படவுள்ள கறுப்பு சுதந்திர தின  எழுச்சிப் பேரணி  ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகள் உட்பட பல்வேறு அமைப்புகள் அரசியல்வாதிகள்  மதத் தலைவர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

இதன்போது வடக்கில் நாளைய தினம் ஆரம்பமாகும் எழுச்சி பேரணியானது கிழக்கில் ஏழாம் திகதி நிறைவடையவுள்ள நிலையில் அதனை கிழக்கு மாகாணத்தில்  எழுச்சியான வகையில் வரவேற்பது குறித்து கலந்துரையாடப்பட்டவுடன் இந்த போராட்டத்திற்கு மக்களை அணிதிரட்டுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் மத தலைவர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

கறுப்பு சுதந்திர தின எழுச்சிப் பேரணி ஏற்பாடு தொடர்பில் மட்டக்களப்பில் விசேட கலந்துரையாடல் வடக்கில் வடகிழக்கு இணைந்த தமிழர் தாயக பகுதியில் முன்னெடுக்கப்படும் தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்து செயற்பாடுகளையும் கண்டித்தும் இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாள் என்பதனை வலியுறுத்தியும் வடகிழக்கு இணைந்ததாக முன்னெடுக்கப்படவுள்ள கறுப்பு சுதந்திர தின  எழுச்சிப் பேரணி  ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகள் உட்பட பல்வேறு அமைப்புகள் அரசியல்வாதிகள்  மதத் தலைவர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.இதன்போது வடக்கில் நாளைய தினம் ஆரம்பமாகும் எழுச்சி பேரணியானது கிழக்கில் ஏழாம் திகதி நிறைவடையவுள்ள நிலையில் அதனை கிழக்கு மாகாணத்தில்  எழுச்சியான வகையில் வரவேற்பது குறித்து கலந்துரையாடப்பட்டவுடன் இந்த போராட்டத்திற்கு மக்களை அணிதிரட்டுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.இந்த கலந்துரையாடலில் மத தலைவர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement