• Nov 19 2024

பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு யாழில் விசேட நிகழ்வு..!

Sharmi / Sep 12th 2024, 3:40 pm
image

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு லிங்காஸ்வர கீதம் வழங்கும் பன்முக நோக்கில் பாரதி எனும் விசேட நிகழ்வு நேற்று  இடம்பெற்றது

வடமராட்சி வல்லையில் உள்ள  தனியார் மண்டபமொன்றில் நேற்று(11)  நடைபெற்றது.

லிங்காஸ்வர கீத இயக்குநர் ஷாஜிதா அட்ஜெயலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,  பிரதம அதிதியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜாவும் , சிறப்பு அதிதிகளாக வர்த்தகர் சண்முகசுந்தரம் பிறேம்குமாரும் , பாடலாசிரியர் வெற்றி துஷ்யந்தனும் கலந்து கொண்டதுடன் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் இடம்பெற்றன

குறித்த நிகழ்வில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் படைப்புகளை இசை, நடனம் ,இலக்கியம் என்னும் பல்கோண பார்வையில் வெளிப்படுத்தும் வகையிலான பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன

இறுதியாக கருத்தாடல் நிகழ்வானது தேசிய கல்விற் கல்லூரியின் ஓய்வு நிலை விரிவுரையாளர் கலாநிதி ந.ரவீந்திரன் முன்னிலையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலாச்சார உத்தியோகத்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள்,தமிழ் பற்றாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு யாழில் விசேட நிகழ்வு. மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு லிங்காஸ்வர கீதம் வழங்கும் பன்முக நோக்கில் பாரதி எனும் விசேட நிகழ்வு நேற்று  இடம்பெற்றதுவடமராட்சி வல்லையில் உள்ள  தனியார் மண்டபமொன்றில் நேற்று(11)  நடைபெற்றது.லிங்காஸ்வர கீத இயக்குநர் ஷாஜிதா அட்ஜெயலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,  பிரதம அதிதியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜாவும் , சிறப்பு அதிதிகளாக வர்த்தகர் சண்முகசுந்தரம் பிறேம்குமாரும் , பாடலாசிரியர் வெற்றி துஷ்யந்தனும் கலந்து கொண்டதுடன் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் இடம்பெற்றனகுறித்த நிகழ்வில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் படைப்புகளை இசை, நடனம் ,இலக்கியம் என்னும் பல்கோண பார்வையில் வெளிப்படுத்தும் வகையிலான பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றனஇறுதியாக கருத்தாடல் நிகழ்வானது தேசிய கல்விற் கல்லூரியின் ஓய்வு நிலை விரிவுரையாளர் கலாநிதி ந.ரவீந்திரன் முன்னிலையில் இடம்பெற்றது.குறித்த நிகழ்வில் கலாச்சார உத்தியோகத்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள்,தமிழ் பற்றாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement