• May 25 2026

பகிடிவதையை தாங்க முடியாமல் ஆற்றில் குதித்து உயிர்மாய்க்க முயன்ற மாணவி; நான்கு மாணவர்கள் கைது

Chithra / Jun 3rd 2025, 2:36 pm
image

குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் ஆற்றில் குதித்து உயிர்மாய்க்க முயன்ற சம்பவம் தொடர்பாக நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தொழில்நுட்பக் கல்லூரிக்கு அருகிலுள்ள ஆற்றில் நேற்று (02) மதியம் குறித்த மாணவி குதித்ததாகவும், அருகில் இருந்த சிலரால் அவர் மீட்கப்பட்டு குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

பொலிஸார் நடத்திய விசாரணையில், பகிடிவதை சம்பவத்தால் அவர் உயிர்மாய்க்க  முயன்றது தெரியவந்துள்ளது. 

அவர் தற்போது குளியாப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார், 

மேலும் அவரது நிலைமை மோசமாக இல்லை என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பாக தொழில்நுட்பக் கல்லூரியின் நான்கு மாணவர்களைக் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  

குறித்த மாணவிக்கு பகிடிவதை வழங்கிய சம்பவம் தொடர்பாக இந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 

குளியாப்பிட்டி பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


பகிடிவதையை தாங்க முடியாமல் ஆற்றில் குதித்து உயிர்மாய்க்க முயன்ற மாணவி; நான்கு மாணவர்கள் கைது குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் ஆற்றில் குதித்து உயிர்மாய்க்க முயன்ற சம்பவம் தொடர்பாக நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொழில்நுட்பக் கல்லூரிக்கு அருகிலுள்ள ஆற்றில் நேற்று (02) மதியம் குறித்த மாணவி குதித்ததாகவும், அருகில் இருந்த சிலரால் அவர் மீட்கப்பட்டு குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸார் நடத்திய விசாரணையில், பகிடிவதை சம்பவத்தால் அவர் உயிர்மாய்க்க  முயன்றது தெரியவந்துள்ளது. அவர் தற்போது குளியாப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார், மேலும் அவரது நிலைமை மோசமாக இல்லை என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.சம்பவம் தொடர்பாக தொழில்நுட்பக் கல்லூரியின் நான்கு மாணவர்களைக் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  குறித்த மாணவிக்கு பகிடிவதை வழங்கிய சம்பவம் தொடர்பாக இந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குளியாப்பிட்டி பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement