• Nov 25 2024

திடீர் விடுமுறை..! வாட்ஸ்அப் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு பறந்த செய்தி..!

Chithra / Dec 7th 2023, 9:34 am
image

 

கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் பெண்கள் பாடசாலையின் அண்மித்த இரண்டு மூன்று மாடி மற்றும் இரண்டு மாடி கட்டிடங்களில் அமைந்துள்ள பல வகுப்பறைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், அந்த கட்டிடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு தரம் 06, 07, 08, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டிடத்தில் சுமார் 18 வகுப்பறைகள் பராமரிக்கப்பட்டு வருவதுடன், அதில் சுமார் எண்ணூறு மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

நேற்று (05) பிற்பகல் பெய்த கனமழையால் கட்டிடங்களின் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களை பாடசாலைக்கு வர வேண்டாம் என கட்டிட நிர்வாகத்தினர் வாட்ஸ் அப் செய்தி மூலம் தெரிவித்துள்ளனர்.

குறித்த கட்டிடத்தை அவதானித்த பின்னர் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விசாரணை நடத்தி கட்டிடத்தின் நிலை குறித்து அறிக்கை பெற்றுக்கொள்வது பொருத்தமானது என கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தலைவர் இந்திக்க ரணவீர தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் குறித்த கட்டடத்தில் கல்வி கற்கும் மாணவர்களை மாவில்மட ரிஷிகலா கலைக் கல்லூரி மற்றும் மாவில்மட கல்லூரிக்கு வகுப்புகளை நடத்துமாறு பணித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

திடீர் விடுமுறை. வாட்ஸ்அப் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு பறந்த செய்தி.  கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் பெண்கள் பாடசாலையின் அண்மித்த இரண்டு மூன்று மாடி மற்றும் இரண்டு மாடி கட்டிடங்களில் அமைந்துள்ள பல வகுப்பறைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், அந்த கட்டிடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு தரம் 06, 07, 08, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.குறித்த கட்டிடத்தில் சுமார் 18 வகுப்பறைகள் பராமரிக்கப்பட்டு வருவதுடன், அதில் சுமார் எண்ணூறு மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.நேற்று (05) பிற்பகல் பெய்த கனமழையால் கட்டிடங்களின் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களை பாடசாலைக்கு வர வேண்டாம் என கட்டிட நிர்வாகத்தினர் வாட்ஸ் அப் செய்தி மூலம் தெரிவித்துள்ளனர்.குறித்த கட்டிடத்தை அவதானித்த பின்னர் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விசாரணை நடத்தி கட்டிடத்தின் நிலை குறித்து அறிக்கை பெற்றுக்கொள்வது பொருத்தமானது என கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தலைவர் இந்திக்க ரணவீர தெரிவித்துள்ளார்.மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் குறித்த கட்டடத்தில் கல்வி கற்கும் மாணவர்களை மாவில்மட ரிஷிகலா கலைக் கல்லூரி மற்றும் மாவில்மட கல்லூரிக்கு வகுப்புகளை நடத்துமாறு பணித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement