வெள்ள அழிவால் நியூயார்க் நகரில், மன்ஹாட்டனுக்கு கிழக்கே உள்ள குயின்ஸில் கிழக்கு-மேற்குப் பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
சாலைகளில் மூழ்கிய வாகனங்களில் சிக்கிய நபர்களை பலத்த முயற்சிகளின் மத்தியில்
அவசரகாலக் குழுவினர் மீட்டனர் என்று அந்நாட்டு தேசிய வானிலை சேவை மற்றும் உள்ளூர் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டன.
வெள்ளப்பெருக்கு திடீரென நியூயோர்க்கை சூழ்ந்ததால் மக்கள் பலர் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.
திடீரென வீசிய புயலால் நியூயோர்க்கில் பேரழிவு; சிறுவன் உயிரிழப்பு - வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள் நியூயோர்க்கில் பெய்து வந்த கனமழையால் திடீரென அங்குள்ள பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் புயலும் அந்தப் பகுதியை சூழ்ந்தது. நியூயோர்க்கின் மத்திய அட்லாண்டிக் மற்றும் வடகிழக்கில் பெய்த மழை மற்றும் திடீர் வெள்ளம், இன்டர்ஸ்டேட் 95 காரிடாரில் பேரழிவை ஏற்படுத்தியது.புயல், வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பேரழிவால் மேரிலாந்தில் சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான் என்று அந்நாட்டுத் தகவல்கள் தெரிவித்துள்ளன. நியூயோர்க் நகரம் மற்றும் வடகிழக்கு முழுவதும் உள்ள நகரங்களை வெள்ளப்பெருக்கு மூழ்கடித்ததால் சுரங்கப்பாதை நிலையங்கள் மற்றும் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. நியூயோர்க்கில் கோடையில் ஏற்பட்ட மற்றொரு கடுமையான வெள்ள அழிவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பென்சில்வேனியா, நியூ ஜெர்சி, மேரிலாந்து மற்றும் வர்ஜீனியாவின் சில பகுதிகளில் பிற்பகலில் திடீர் வெள்ள அழிவு தீவிரமாக இருந்தன. மேரிலாந்து மற்றும் பென்சில்வேனியாவில், வெள்ளத்தில் மூழ்கிய சாலைகளால் சிக்கித் தவிக்கும் காணொளி வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ள அழிவால் நியூயார்க் நகரில், மன்ஹாட்டனுக்கு கிழக்கே உள்ள குயின்ஸில் கிழக்கு-மேற்குப் பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சாலைகளில் மூழ்கிய வாகனங்களில் சிக்கிய நபர்களை பலத்த முயற்சிகளின் மத்தியில்அவசரகாலக் குழுவினர் மீட்டனர் என்று அந்நாட்டு தேசிய வானிலை சேவை மற்றும் உள்ளூர் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டன.வெள்ளப்பெருக்கு திடீரென நியூயோர்க்கை சூழ்ந்ததால் மக்கள் பலர் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.