• Sep 29 2024

பலத்த பாதுகாப்புடன் குருந்தூர் மலையை நோக்கி படையெடுக்கும் பிக்குகள் அணி..! வீதியில் பறக்கும் பௌத்த கொடி

Chithra / Jun 20th 2024, 12:25 pm
image

Advertisement

 

முல்லைத்தீவு - குமுழமுனை, தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை பகுதியில் நீதிமன்றத்தின் அனுமதியை மீறி சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பௌத்த விகாரைக்கு பொலிஸார், விஷேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் பிக்குகள் குழு பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 16ஆம் திகதி மகியங்கனையிலிருந்து பாதயாத்திரையை ஆரம்பித்த பிக்குகள் குழு, இன்று  முல்லைத்தீவு மாவட்டத்தை அடைந்து,  குருந்தூர் மலையை செல்வதற்கான பயணத்தை ஆரம்பித்துள்ளது.

இந்த பயண வழிகள் எங்கும் பொலிஸ் பாதுகாப்பு இடப்பட்டுள்ளது.

குறிப்பாக அளம்பில்  சந்தியை அண்டிய பகுதியில் விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் மற்றும் பொலிசார் இணைந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருப்பதுடன், வீதி தடுப்புக்கள் அப்பகுதியில் வைத்துள்ளனர். 

பொலிசாரின் பாதுகாப்புடன் தென்பகுதி மற்றும் வெளியோர் பகுதிகளில் இருந்து வருகை தந்த பௌத்த மக்கள் பௌத்த கொடியை வீதியில் இரு பகுதிகளிலும் நாட்டி கூடாரங்களையும் அமைத்துள்ளனர்.


பலத்த பாதுகாப்புடன் குருந்தூர் மலையை நோக்கி படையெடுக்கும் பிக்குகள் அணி. வீதியில் பறக்கும் பௌத்த கொடி  முல்லைத்தீவு - குமுழமுனை, தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை பகுதியில் நீதிமன்றத்தின் அனுமதியை மீறி சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பௌத்த விகாரைக்கு பொலிஸார், விஷேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் பிக்குகள் குழு பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளனர்.கடந்த 16ஆம் திகதி மகியங்கனையிலிருந்து பாதயாத்திரையை ஆரம்பித்த பிக்குகள் குழு, இன்று  முல்லைத்தீவு மாவட்டத்தை அடைந்து,  குருந்தூர் மலையை செல்வதற்கான பயணத்தை ஆரம்பித்துள்ளது.இந்த பயண வழிகள் எங்கும் பொலிஸ் பாதுகாப்பு இடப்பட்டுள்ளது.குறிப்பாக அளம்பில்  சந்தியை அண்டிய பகுதியில் விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் மற்றும் பொலிசார் இணைந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருப்பதுடன், வீதி தடுப்புக்கள் அப்பகுதியில் வைத்துள்ளனர். பொலிசாரின் பாதுகாப்புடன் தென்பகுதி மற்றும் வெளியோர் பகுதிகளில் இருந்து வருகை தந்த பௌத்த மக்கள் பௌத்த கொடியை வீதியில் இரு பகுதிகளிலும் நாட்டி கூடாரங்களையும் அமைத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement