• Dec 14 2024

புகையிரதத்தில் மோதி பதின்ம வயது இளைஞன் உயிரிழப்பு...!

Sharmi / Jun 22nd 2024, 1:23 pm
image

கடுகன்னாவ மற்றும் பிலிமத்தலாவ புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் புகையிரதத்தில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றையதினம்(21) மாலை இடம்பெற்றது.

கண்டியில் இருந்து பொல்கஹவெல நோக்கி பயணித்த புகையிரதம் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் கடுகன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

உயிரிழந்த இளைஞனின் சடலம் மீதான பிரேத பரிசோதனை பேராதனை வைத்தியசாலையில் நடைபெறவுள்ளதுடன்,சம்பவம் தொடர்பில் கடுகன்னாவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

புகையிரதத்தில் மோதி பதின்ம வயது இளைஞன் உயிரிழப்பு. கடுகன்னாவ மற்றும் பிலிமத்தலாவ புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் புகையிரதத்தில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்றையதினம்(21) மாலை இடம்பெற்றது.கண்டியில் இருந்து பொல்கஹவெல நோக்கி பயணித்த புகையிரதம் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த விபத்தில் கடுகன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.உயிரிழந்த இளைஞனின் சடலம் மீதான பிரேத பரிசோதனை பேராதனை வைத்தியசாலையில் நடைபெறவுள்ளதுடன்,சம்பவம் தொடர்பில் கடுகன்னாவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement