• Nov 22 2024

இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி கோரவிபத்து...! இருவர் உயிரிழப்பு- பலர் காயம்..!

Sharmi / Jun 22nd 2024, 1:18 pm
image

தென் அமெரிக்க நாடான சிலியின் தலைநகருக்கு வெளியே சோதனை ஓட்டத்தின் போது சரக்கு ரயில் மற்றொரு ரயிலுடன் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு ரயில் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஒன்பது பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

வேக சோதனைக்காக இயக்கப்பட்ட  குறித்த ரயிலில்  10 ஊழியர்கள் பயணம்  செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், 1,500 டன் தாமிரத்தை ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில் ஒன்றும் அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த போது இரண்டு ரயில்களும் நேருக்கு நேர் மோதிலே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த ரயில், விபத்துக்குள்ளானதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்தனர். 

அதேவேளை குறித்த விபத்தில் உயிரிழந்த இருவரும் சரக்கு ரயிலில் இருந்த பணியாளர்கள் என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். 

சோதனை ரயிலை இயக்கிய நான்கு சீன பிரஜைகள் உட்பட மேலும் ஒன்பது பேர் இதன்போது காயமடைந்த நிலையில்  ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவர் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும் மருத்துவ ஊழியர்கள் தெரிவித்தனர்.


இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி கோரவிபத்து. இருவர் உயிரிழப்பு- பலர் காயம். தென் அமெரிக்க நாடான சிலியின் தலைநகருக்கு வெளியே சோதனை ஓட்டத்தின் போது சரக்கு ரயில் மற்றொரு ரயிலுடன் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு ரயில் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஒன்பது பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.வேக சோதனைக்காக இயக்கப்பட்ட  குறித்த ரயிலில்  10 ஊழியர்கள் பயணம்  செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், 1,500 டன் தாமிரத்தை ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில் ஒன்றும் அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த போது இரண்டு ரயில்களும் நேருக்கு நேர் மோதிலே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.குறித்த ரயில், விபத்துக்குள்ளானதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்தனர். அதேவேளை குறித்த விபத்தில் உயிரிழந்த இருவரும் சரக்கு ரயிலில் இருந்த பணியாளர்கள் என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். சோதனை ரயிலை இயக்கிய நான்கு சீன பிரஜைகள் உட்பட மேலும் ஒன்பது பேர் இதன்போது காயமடைந்த நிலையில்  ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவர் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும் மருத்துவ ஊழியர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement