கட்சி மீது வழக்கு தொடுத்து தலைமையை விமர்சிக்கும் ஒருவருக்கு எவ்வாறு பாராளுமன்றத்தில் கால அவகாசம் வழங்க முடியும் என எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பியுள்ளார்.
சரத் பொன்சேகா கட்சியில் இருந்து நீக்கும் தீர்மானமோ அல்லது அவ்வாறான யோசனையோ எதனையும் எடுக்கவில்லை, இணையத்தளம் ஒன்றில் வெளியான பொய்யான செய்தியின் அடிப்படையில் கட்சிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
கட்சித் தலைவர் தம்மைப் பேசவேண்டாம் என்று ஒருபோதும் கூறவில்லை என்பதையும், கட்சிக்கு எதிராக வழக்குத் தொடுத்தவர் என்ற வகையில் தமக்கு நேரம் ஒதுக்குவது பொருத்தமற்றது என்பதையும் உணர்ந்தே இவ்வாறான முடிவை எடுத்ததாக கிரியெல்ல தெரிவித்தார்.
சரத் பொன்சேகா பேசுவதற்கு நேரம் ஒதுக்கவில்லை என பாராளுமன்றத்தில் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணையில் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தலைமையை விமர்சிக்கும் ஒருவருக்கு எவ்வாறு பாராளுமன்றத்தில் உரையாற்ற கால அவகாசம் வழங்க முடியும். லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி கட்சி மீது வழக்கு தொடுத்து தலைமையை விமர்சிக்கும் ஒருவருக்கு எவ்வாறு பாராளுமன்றத்தில் கால அவகாசம் வழங்க முடியும் என எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பியுள்ளார்.சரத் பொன்சேகா கட்சியில் இருந்து நீக்கும் தீர்மானமோ அல்லது அவ்வாறான யோசனையோ எதனையும் எடுக்கவில்லை, இணையத்தளம் ஒன்றில் வெளியான பொய்யான செய்தியின் அடிப்படையில் கட்சிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.கட்சித் தலைவர் தம்மைப் பேசவேண்டாம் என்று ஒருபோதும் கூறவில்லை என்பதையும், கட்சிக்கு எதிராக வழக்குத் தொடுத்தவர் என்ற வகையில் தமக்கு நேரம் ஒதுக்குவது பொருத்தமற்றது என்பதையும் உணர்ந்தே இவ்வாறான முடிவை எடுத்ததாக கிரியெல்ல தெரிவித்தார்.சரத் பொன்சேகா பேசுவதற்கு நேரம் ஒதுக்கவில்லை என பாராளுமன்றத்தில் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணையில் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.