• Nov 28 2024

மலையக பகுதிகளில் வன விலங்குகளின் உயிருக்கு அச்சுறுத்தல்...!

Sharmi / Jun 11th 2024, 4:27 pm
image

மலையக  பகுதிகளில் மரக்கறி பயிர்கள் மற்றும் ஏனைய பயிர்களை பாதுகாக்க சில விவசாயிகள் பயன்படுத்தும் பல்வேறு வகையான (பொறி) வலைகளால் வன விலங்குகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மலையக விவசாயிகள் வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க பல்வேறு யுக்திகளை கையாள்வதும் சிலர் குறைந்த விலையில் வலைகள் மற்றும் பல்வேறு வகையான பொறி மீன்பிடி வலைகளை பயன்படுத்துதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வலையில் சிக்கி உயிரிழப்பது, பலத்த காயம் அடைவது, கை கால் முறிவு போன்ற பேர் இடர்களுக்கு ஆளாகும் வனவிலங்குகள், சில விவசாயிகள் வலையில் சிக்கும் வன விலங்குகளை கொன்று இறைச்சிக்காக விற்பனை செய்து வருவதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மலையகப் பகுதிகளில் விலங்குகளை வேட்டையாட பொதுவாகப் பயன்படுத்தப்படும் கம்பி வலைகள், ஹூக்கா டேப்கள் போன்றவற்றை பயன்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

அதேவேளை, பொறி மற்றும் வலைகளை பயன்படுத்தி வேட்டையாடுவது பாரிய குற்ற செயல், ஆகையால் இவ்வாறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்களை அருகில் உள்ள வன பாதுகாப்பு அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வருமாறு வன பாதுகாப்பு அதிகாரிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


மலையக பகுதிகளில் வன விலங்குகளின் உயிருக்கு அச்சுறுத்தல். மலையக  பகுதிகளில் மரக்கறி பயிர்கள் மற்றும் ஏனைய பயிர்களை பாதுகாக்க சில விவசாயிகள் பயன்படுத்தும் பல்வேறு வகையான (பொறி) வலைகளால் வன விலங்குகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.மலையக விவசாயிகள் வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க பல்வேறு யுக்திகளை கையாள்வதும் சிலர் குறைந்த விலையில் வலைகள் மற்றும் பல்வேறு வகையான பொறி மீன்பிடி வலைகளை பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த வலையில் சிக்கி உயிரிழப்பது, பலத்த காயம் அடைவது, கை கால் முறிவு போன்ற பேர் இடர்களுக்கு ஆளாகும் வனவிலங்குகள், சில விவசாயிகள் வலையில் சிக்கும் வன விலங்குகளை கொன்று இறைச்சிக்காக விற்பனை செய்து வருவதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.மலையகப் பகுதிகளில் விலங்குகளை வேட்டையாட பொதுவாகப் பயன்படுத்தப்படும் கம்பி வலைகள், ஹூக்கா டேப்கள் போன்றவற்றை பயன்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அதேவேளை, பொறி மற்றும் வலைகளை பயன்படுத்தி வேட்டையாடுவது பாரிய குற்ற செயல், ஆகையால் இவ்வாறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்களை அருகில் உள்ள வன பாதுகாப்பு அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வருமாறு வன பாதுகாப்பு அதிகாரிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement