இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைத்துவ பதவிக்கு மும்முனை போட்டி காணப்படுகின்றமை தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் 17 ஆவது தேசிய மாநாடு எதிர்வரும் ஜனவரி மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதுடன் இதன்போது தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவு செய்யப்படவுள்ளார்.
இந்த நிலையிலேயே இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவ பதவிக்கு மூவர் போட்டியிடுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன் ஆகியோர் போட்டியிடுகின்றமை உறுதிப்பட்டிருந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனும் போட்டியிடுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தலைமைத்துவ பதவிக்கு மும்முனை போட்டி காணப்படுகின்றதா என்ற கேள்விக்கு மட்டக்களப்பு மாவட்டத்தைச் சார்ந்த தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்கள் அதை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழரசு கட்சியின் தலைமைத்துவ பதவிக்கு மும்முனை போட்டி. களமிறங்கிய மற்றுமொருவர் இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைத்துவ பதவிக்கு மும்முனை போட்டி காணப்படுகின்றமை தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றார்.இலங்கை தமிழரசுக் கட்சியின் 17 ஆவது தேசிய மாநாடு எதிர்வரும் ஜனவரி மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதுடன் இதன்போது தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவு செய்யப்படவுள்ளார்.இந்த நிலையிலேயே இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவ பதவிக்கு மூவர் போட்டியிடுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன் ஆகியோர் போட்டியிடுகின்றமை உறுதிப்பட்டிருந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனும் போட்டியிடுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தலைமைத்துவ பதவிக்கு மும்முனை போட்டி காணப்படுகின்றதா என்ற கேள்விக்கு மட்டக்களப்பு மாவட்டத்தைச் சார்ந்த தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்கள் அதை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.