• Nov 15 2025

மன்னாரில் மாவீரர் பெற்றோர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு!

shanuja / Nov 13th 2025, 2:33 pm
image

மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் ஏற்பாட்டில்   “ மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு ” இன்று மன்னாரில்  உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது.



இந்த நிகழ்வு 150 மேற்பட்ட மாவீரர்களின் உறவுகளின் பங்கேற்புடன் நடைபெற்றுள்ளது.


மன்னார் மாவட்டத்தில் வாழும் மாவீரர் பெற்றோர் மற்றும்   உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைத்து அவர்களை கெளரவிக்கும் முகமாக மன்னார் இரணை இலுப்பை குளம்,முள்ளிக்குளம் பண்டிவிருச்சான் பிரதேசத்தை சேர்ந்த 95 மாவீரர்களின் பெற்றோர் கெளரவிக்கப்பட்டனர்.



இம்மதிப்பளிப்பில் அருட்தந்தையர்கள்,முன்னைய நாள் போராளிகள் மற்றும் மாவீரர் பெற்றோர்கள், மக்கள் என  பலர் பங்குபற்றியிருந்தனர்.


முதலில் மாவீரர் பெற்றோர்களால் பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு ,மலர்மாலை அணிவிக்கப்பட்ட பின் அக வணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.


குறித்த நிகழ்வில் மாவீரர் தியாகங்கள்  குறித்த பேச்சுக்கள் நடைபெற்றதுடன் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோருக்கு கெளரவிப்பு வழங்கப்பட்டதுடன்  கெளரவிப்பு நினைவாக மரக்கன்றுகள்  மாவீரர் பெற்றோர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் மாவீரர் பெற்றோர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் ஏற்பாட்டில்   “ மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு ” இன்று மன்னாரில்  உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது.இந்த நிகழ்வு 150 மேற்பட்ட மாவீரர்களின் உறவுகளின் பங்கேற்புடன் நடைபெற்றுள்ளது.மன்னார் மாவட்டத்தில் வாழும் மாவீரர் பெற்றோர் மற்றும்   உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைத்து அவர்களை கெளரவிக்கும் முகமாக மன்னார் இரணை இலுப்பை குளம்,முள்ளிக்குளம் பண்டிவிருச்சான் பிரதேசத்தை சேர்ந்த 95 மாவீரர்களின் பெற்றோர் கெளரவிக்கப்பட்டனர்.இம்மதிப்பளிப்பில் அருட்தந்தையர்கள்,முன்னைய நாள் போராளிகள் மற்றும் மாவீரர் பெற்றோர்கள், மக்கள் என  பலர் பங்குபற்றியிருந்தனர்.முதலில் மாவீரர் பெற்றோர்களால் பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு ,மலர்மாலை அணிவிக்கப்பட்ட பின் அக வணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.குறித்த நிகழ்வில் மாவீரர் தியாகங்கள்  குறித்த பேச்சுக்கள் நடைபெற்றதுடன் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோருக்கு கெளரவிப்பு வழங்கப்பட்டதுடன்  கெளரவிப்பு நினைவாக மரக்கன்றுகள்  மாவீரர் பெற்றோர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement