• Nov 26 2024

மட்டக்களப்பில் உயிருக்கு போராடிவரும் காட்டு யானை...! samugammedia

Sharmi / Jan 3rd 2024, 3:57 pm
image

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட - மரப்பாலம் இராஜபுரம் பகுதியில் காட்டு யானை ஒன்று காயங்களுடன் உயிருக்கு போராடிவரும் நிலையில் அதற்கான சிகிச்சை வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை இராஜபுரம் பகுதியில் உள்ள தனியார் காணியொன்றினுள்ளே குறித்த காட்டு யானை வீழ்ந்து கிடந்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


இன்று அதிகாலை  குறித்த பகுதியில் ஆலயம் ஒன்றினையும் விவசாய நிலங்களையும் சேதப்படுத்திய யானை தனியார் காணியொன்றுக்குள் வீழ்ந்துள்ளது.

குறித்த இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு வனஜீவராசிகள் திணைக்கள மாவட்ட பொறுப்பதிகாரி சுரேஸ் மற்றும் உத்தியோகத்தர்கள் யானையினை நேரில் பார்வையிட்டதுடன் , யானையின் சிகிச்சைக்காக வனஜீவராசிகள் திணைக்கள வைத்தியர்களுக்கு அறிவித்தல் வழங்கியுள்ளனர்.

உணவு உட்கொள்ள முடியாதுள்ள யானையினை பிரதேச வாசிகள்  மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் அவ்விடத்திலேயே தற்போதுவரை பராமரித்து வருகின்றனர்.

குறித்த யானையின் வாய்ப்பகுதி மற்றும் உடல் பகுதிகளில் வெடி காயங்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.





மட்டக்களப்பில் உயிருக்கு போராடிவரும் காட்டு யானை. samugammedia மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட - மரப்பாலம் இராஜபுரம் பகுதியில் காட்டு யானை ஒன்று காயங்களுடன் உயிருக்கு போராடிவரும் நிலையில் அதற்கான சிகிச்சை வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இன்று அதிகாலை இராஜபுரம் பகுதியில் உள்ள தனியார் காணியொன்றினுள்ளே குறித்த காட்டு யானை வீழ்ந்து கிடந்துள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இன்று அதிகாலை  குறித்த பகுதியில் ஆலயம் ஒன்றினையும் விவசாய நிலங்களையும் சேதப்படுத்திய யானை தனியார் காணியொன்றுக்குள் வீழ்ந்துள்ளது.குறித்த இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு வனஜீவராசிகள் திணைக்கள மாவட்ட பொறுப்பதிகாரி சுரேஸ் மற்றும் உத்தியோகத்தர்கள் யானையினை நேரில் பார்வையிட்டதுடன் , யானையின் சிகிச்சைக்காக வனஜீவராசிகள் திணைக்கள வைத்தியர்களுக்கு அறிவித்தல் வழங்கியுள்ளனர்.உணவு உட்கொள்ள முடியாதுள்ள யானையினை பிரதேச வாசிகள்  மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் அவ்விடத்திலேயே தற்போதுவரை பராமரித்து வருகின்றனர்.குறித்த யானையின் வாய்ப்பகுதி மற்றும் உடல் பகுதிகளில் வெடி காயங்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement