• Oct 29 2025

நீதிமன்ற வளாகத்திற்குள் விளையாட்டுத் துப்பாக்கியுடன் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்திய பெண்

Chithra / Oct 28th 2025, 12:56 pm
image


அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றிற்காக விளையாட்டுத் துப்பாக்கியுடன் வந்த பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

நெடோல்பிட்டியவைச் சேர்ந்த பெண் நீதிமன்றத்திற்கு நேற்று (27) வழக்கு ஒன்றிற்காக வருகைதந்துள்ளார். 

இதன்போது நீதிமன்றத்தின் பிரதான நுழைவாயிலில் கடமையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் குறித்த பெண்ணின் கைப்பைக்குள் இருந்து விளையாட்டுத் துப்பாக்கியொன்றைக் கைப்பற்றியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டு அவிசாவளை பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த பெண் நீதிமன்ற வளாகத்திற்குள் விளையாட்டுத் துப்பாக்கியுடன் நுழைய முயன்றதற்கான காரணத்தை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

நீதிமன்ற வளாகத்திற்குள் விளையாட்டுத் துப்பாக்கியுடன் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்திய பெண் அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றிற்காக விளையாட்டுத் துப்பாக்கியுடன் வந்த பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெடோல்பிட்டியவைச் சேர்ந்த பெண் நீதிமன்றத்திற்கு நேற்று (27) வழக்கு ஒன்றிற்காக வருகைதந்துள்ளார். இதன்போது நீதிமன்றத்தின் பிரதான நுழைவாயிலில் கடமையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் குறித்த பெண்ணின் கைப்பைக்குள் இருந்து விளையாட்டுத் துப்பாக்கியொன்றைக் கைப்பற்றியுள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டு அவிசாவளை பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.குறித்த பெண் நீதிமன்ற வளாகத்திற்குள் விளையாட்டுத் துப்பாக்கியுடன் நுழைய முயன்றதற்கான காரணத்தை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement