ஆஸ்துமா நோய்க்காகப் பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய 59 வயதுடைய பெண் ஒருவர், ஒவ்வாமையுடைய மருந்தை உட்கொண்டதால் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படும் சம்பவம் கண்டி, யடிநுவர பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யடிநுவர பகுதியைச் சேர்ந்த கே.ஏ. நந்தனி கலன்சூரிய என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
உயிரிழந்த பெண் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக ஆஸ்துமா நோய்க்காகப் பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இவருக்கு 'அமோக்சிலின்' (Amoxicillin) என்ற மருந்து ஒவ்வாமை (Allergy) உடையது என கடந்த 2005 ஆம் ஆண்டிலேயே மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
கடந்த 5 ஆம் திகதி நோய் தீவிரமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், 10 ஆம் திகதி குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
இதன்போது, அவருக்கு ஒவ்வாமை எனத் தெரிந்திருந்தும், அதே 'அமோக்சிலின்' மருந்தையே வைத்தியசாலை ஊழியர்கள் வீட்டிற்கு வழங்கியதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அன்று இரவே அந்த மருந்தை உட்கொண்ட பெண், கடுமையான நிலைக்கு உள்ளாகியுள்ளார்.
உடனடியாக அவரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் இதுவரை இது தொடர்பாக எவ்வித அதிகாரப்பூர்வ முறைப்பாடும் கிடைக்கவில்லை என்றும், முறைப்பாடு கிடைத்தவுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் பேராதனை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அர்ஜுன திலகரத்ன தெரிவித்தார்.
எனினும், இந்த மரணம் குறித்துப் பேராதனை பொலிஸாருக்கும், வைத்தியசாலை பொலிஸாருக்கும் ஏற்கனவே முறைப்பாடு செய்துள்ளதாக உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கண்டி தேசிய வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், மரணம் குறித்து 'திறந்த தீர்ப்பு' (Open verdict) வழங்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் உடற்பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அறிக்கை கிடைத்த பின்னரே மரணத்திற்கான இறுதி காரணம் அறிவிக்கப்படும் எனச் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
மருந்து உட்கொண்ட இரவே உயிரிழந்த பெண்; வைத்தியசாலை மீது குற்றச்சாட்டு ஆஸ்துமா நோய்க்காகப் பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய 59 வயதுடைய பெண் ஒருவர், ஒவ்வாமையுடைய மருந்தை உட்கொண்டதால் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படும் சம்பவம் கண்டி, யடிநுவர பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.யடிநுவர பகுதியைச் சேர்ந்த கே.ஏ. நந்தனி கலன்சூரிய என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.உயிரிழந்த பெண் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக ஆஸ்துமா நோய்க்காகப் பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு 'அமோக்சிலின்' (Amoxicillin) என்ற மருந்து ஒவ்வாமை (Allergy) உடையது என கடந்த 2005 ஆம் ஆண்டிலேயே மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.கடந்த 5 ஆம் திகதி நோய் தீவிரமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், 10 ஆம் திகதி குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதன்போது, அவருக்கு ஒவ்வாமை எனத் தெரிந்திருந்தும், அதே 'அமோக்சிலின்' மருந்தையே வைத்தியசாலை ஊழியர்கள் வீட்டிற்கு வழங்கியதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.அன்று இரவே அந்த மருந்தை உட்கொண்ட பெண், கடுமையான நிலைக்கு உள்ளாகியுள்ளார். உடனடியாக அவரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.இந்நிலையில் இதுவரை இது தொடர்பாக எவ்வித அதிகாரப்பூர்வ முறைப்பாடும் கிடைக்கவில்லை என்றும், முறைப்பாடு கிடைத்தவுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் பேராதனை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அர்ஜுன திலகரத்ன தெரிவித்தார்.எனினும், இந்த மரணம் குறித்துப் பேராதனை பொலிஸாருக்கும், வைத்தியசாலை பொலிஸாருக்கும் ஏற்கனவே முறைப்பாடு செய்துள்ளதாக உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.கண்டி தேசிய வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், மரணம் குறித்து 'திறந்த தீர்ப்பு' (Open verdict) வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்ணின் உடற்பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அறிக்கை கிடைத்த பின்னரே மரணத்திற்கான இறுதி காரணம் அறிவிக்கப்படும் எனச் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.