• Oct 31 2024

பேசாலையில் வீட்டுக்குள் முக்கிய பொருளை மறைத்து வைத்திருந்த பெண் கைது...!samugammedia

Sharmi / Oct 4th 2023, 4:31 pm
image

Advertisement

பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள காட்டாஸ்பத்திரி கிராம பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதியுடன் பெண் ஒருவர் இன்று (4) மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேசாலை இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் குறித்த வீட்டிற்குச் சென்று சோதனையை முன்னெடுத்தனர்.

இதன் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கேரள கஞ்சா பொதியை மீட்டனர்.

குறித்த பொதியில் சுமார் 2 கிலோ 300 கிராம்  கேரள கஞ்சா இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இதன் போது குறித்த வீட்டில் இருந்த 44 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொதி மற்றும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண் பேசாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பேசாலையில் வீட்டுக்குள் முக்கிய பொருளை மறைத்து வைத்திருந்த பெண் கைது.samugammedia பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள காட்டாஸ்பத்திரி கிராம பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதியுடன் பெண் ஒருவர் இன்று (4) மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.பேசாலை இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் குறித்த வீட்டிற்குச் சென்று சோதனையை முன்னெடுத்தனர்.இதன் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கேரள கஞ்சா பொதியை மீட்டனர்.குறித்த பொதியில் சுமார் 2 கிலோ 300 கிராம்  கேரள கஞ்சா இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.இதன் போது குறித்த வீட்டில் இருந்த 44 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொதி மற்றும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண் பேசாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement