• Nov 22 2024

போதையில் முச்சக்கரவண்டி பந்தயம்; இன்று அதிகாலை சிக்கிய 09 இளைஞர்கள்

Chithra / Oct 28th 2024, 11:12 am
image


கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து விதிகளை மீறி முச்சக்கரவண்டி பந்தயத்தில் ஈடுபட்ட நபர்களை வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று அதிகாலை இந்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

09 முச்சக்கர வண்டிகளுடன் 09 சாரதிகள் இவ்வாறு செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் வெல்லம்பிட்டிய, தெமட்டகொட, மோதரை, கெரவலப்பிட்டிய மற்றும் மாபோல பிரதேசங்களை  சேர்ந்த 18 முதல் 22 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியின் மாபொல பிரதேசத்தில் நீண்ட காலமாக முச்சக்கரவண்டி  பந்தயத்தில் குறித்த குழுவினர் ஈடுபட்டு வருவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த  பந்தயத்தினால் அவ்வீதியில் பயணிக்கும் வாகனங்கள், பாதசாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டியுள்ளது.

கைது செய்யப்பட்ட முச்சக்கர வண்டி சாரதிகளை ராகம பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்திய போது, ​​அவர்கள் மது அருந்தியிருந்தமை தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், சந்தேக நபர்கள் வெலிசர நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

போதையில் முச்சக்கரவண்டி பந்தயம்; இன்று அதிகாலை சிக்கிய 09 இளைஞர்கள் கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து விதிகளை மீறி முச்சக்கரவண்டி பந்தயத்தில் ஈடுபட்ட நபர்களை வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.இன்று அதிகாலை இந்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.09 முச்சக்கர வண்டிகளுடன் 09 சாரதிகள் இவ்வாறு செய்யப்பட்டுள்ளனர்.கைதுசெய்யப்பட்டவர்கள் வெல்லம்பிட்டிய, தெமட்டகொட, மோதரை, கெரவலப்பிட்டிய மற்றும் மாபோல பிரதேசங்களை  சேர்ந்த 18 முதல் 22 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியின் மாபொல பிரதேசத்தில் நீண்ட காலமாக முச்சக்கரவண்டி  பந்தயத்தில் குறித்த குழுவினர் ஈடுபட்டு வருவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.இந்த  பந்தயத்தினால் அவ்வீதியில் பயணிக்கும் வாகனங்கள், பாதசாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டியுள்ளது.கைது செய்யப்பட்ட முச்சக்கர வண்டி சாரதிகளை ராகம பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்திய போது, ​​அவர்கள் மது அருந்தியிருந்தமை தெரியவந்துள்ளது.இந்த நிலையில், சந்தேக நபர்கள் வெலிசர நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement