இம்முறை தேர்தலில் வெற்றியீட்டி ஆளுந்தரப்பிலோ எதிர் தரப்டிலோ பாராளுமன்ற உறுப்பினராகினால் மக்கள் குறைகளை தீர்த்து வைப்பேன் என்றும் மீண்டும் ஒரு முறை சந்தர்ப்பம் தாருங்கள் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற வேட்பாளரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.
கிண்ணியாவில் உள்ள மத்திய காரியாலயத்தில் நேற்று (27) இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில் கடந்த 2020 ஆம் ஆண்டில் அமோக வெற்றிவாகை சூடிய நான் இம்முறை அதனை விட மூன்று மடங்கு களத்தில் இறங்கியுள்ளேன். வீட்டுக்கு வீடு பிரச்சாரப் பணியில் திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் திறம்பட கட்சி ஆதரவாளர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன்.
24 வருட கால அரசியலில் சமூகத்துக்காக தன்னை அர்ப்பணம் செய்து பல அபிவிருத்திகளை குக்கிராமம், நகரம் என செய்துகாட்டியுள்ளேன் இம்முறையும் பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் திருகோணமலை மாவட்டம் இரு ஆசனங்களை வெற்றி கொள்ளக்கூடிய வாய்ப்பு இருக்கிறது இதனால் ஆளுங்கட்சி அரசாங்க பிரதிநிதியாகவோ அல்லது எதிர் கட்சி பிரதி நிதியாகவோ எதுவாக இருந்தாலும் மக்கள் குறைகள் தீர்க்கப்பட்டு சேவைகள் இடம் பெறும் என்றார்.
மக்கள் குறைகளைத் தீர்ப்பேன் : மீண்டும் ஒரு முறை சந்தர்ப்பம் தாருங்கள் - தௌபீக் இம்முறை தேர்தலில் வெற்றியீட்டி ஆளுந்தரப்பிலோ எதிர் தரப்டிலோ பாராளுமன்ற உறுப்பினராகினால் மக்கள் குறைகளை தீர்த்து வைப்பேன் என்றும் மீண்டும் ஒரு முறை சந்தர்ப்பம் தாருங்கள் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற வேட்பாளரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.கிண்ணியாவில் உள்ள மத்திய காரியாலயத்தில் நேற்று (27) இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில் கடந்த 2020 ஆம் ஆண்டில் அமோக வெற்றிவாகை சூடிய நான் இம்முறை அதனை விட மூன்று மடங்கு களத்தில் இறங்கியுள்ளேன். வீட்டுக்கு வீடு பிரச்சாரப் பணியில் திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் திறம்பட கட்சி ஆதரவாளர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். 24 வருட கால அரசியலில் சமூகத்துக்காக தன்னை அர்ப்பணம் செய்து பல அபிவிருத்திகளை குக்கிராமம், நகரம் என செய்துகாட்டியுள்ளேன் இம்முறையும் பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் திருகோணமலை மாவட்டம் இரு ஆசனங்களை வெற்றி கொள்ளக்கூடிய வாய்ப்பு இருக்கிறது இதனால் ஆளுங்கட்சி அரசாங்க பிரதிநிதியாகவோ அல்லது எதிர் கட்சி பிரதி நிதியாகவோ எதுவாக இருந்தாலும் மக்கள் குறைகள் தீர்க்கப்பட்டு சேவைகள் இடம் பெறும் என்றார்.