• Apr 24 2026

முல்லைத்தீவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு...!samugammedia

Ziya / Jan 26th 2024, 8:55 am
image

முல்லைத்தீவு சுதந்திரபுரம் வாகிசன் வீதியில் நேற்று(25) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

சுதந்திரபுரம் வாகிசன் வீதியில் நெல் வெட்டும் இயந்திரத்தினை ஏற்றிவந்த உழவு இயந்திரமும் சிறிய ரக பட்டா ரக வாகனமும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் பட்டா வாகனத்தில் பயணித்த சுதந்திரபுரம் பகுதியினை சேர்ந்த  நவீன் என்ற இளைஞன் படுகாயம் அடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு  கொண்டு செல்லப்பட்ட வேளை உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் நெல் வெட்டும் இயந்திரத்தினை ஏற்றி சென்ற உழவு இயந்திரத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.


முல்லைத்தீவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு.samugammedia முல்லைத்தீவு சுதந்திரபுரம் வாகிசன் வீதியில் நேற்று(25) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுசுதந்திரபுரம் வாகிசன் வீதியில் நெல் வெட்டும் இயந்திரத்தினை ஏற்றிவந்த உழவு இயந்திரமும் சிறிய ரக பட்டா ரக வாகனமும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.குறித்த விபத்தில் பட்டா வாகனத்தில் பயணித்த சுதந்திரபுரம் பகுதியினை சேர்ந்த  நவீன் என்ற இளைஞன் படுகாயம் அடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு  கொண்டு செல்லப்பட்ட வேளை உயிரிழந்துள்ளார்.விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் நெல் வெட்டும் இயந்திரத்தினை ஏற்றி சென்ற உழவு இயந்திரத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement