• Nov 05 2026

பணச்சலவை வழக்கில் டேசி பாட்டிக்கு விடுதலை; நீதிமன்றில் யோஷித கூறியது என்ன?

Chithra / Nov 3rd 2026, 12:35 pm
image


 

பணச்சலவை தடுப்புச் சட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒழுங்குவிதிகளின் கீழ், யோஷித ராஜபக்ஷவுடன் இணைந்து குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அவரது பாட்டியான டேசி பொரஸ்ட், குறித்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.


கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (03) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.


டேசி பொரஸ்ட்டுக்கு எதிரான வழக்கைத் தொடர்ந்து எதிர்கொள்ளும் அளவுக்கு அவருக்கு முறையான மனநிலை இல்லை என முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைப் பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளது.


இதேவேளை, பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஏற்க மறுத்துள்ள யோஷித ராஜபக்ஷ, தாம் குற்றவாளியல்ல என இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


குறித்த குற்றச்சாட்டுகள் திறந்த நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டபோதே அவர் இவ்வாறு தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார்.

பணச்சலவை வழக்கில் டேசி பாட்டிக்கு விடுதலை; நீதிமன்றில் யோஷித கூறியது என்ன  பணச்சலவை தடுப்புச் சட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒழுங்குவிதிகளின் கீழ், யோஷித ராஜபக்ஷவுடன் இணைந்து குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அவரது பாட்டியான டேசி பொரஸ்ட், குறித்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (03) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.டேசி பொரஸ்ட்டுக்கு எதிரான வழக்கைத் தொடர்ந்து எதிர்கொள்ளும் அளவுக்கு அவருக்கு முறையான மனநிலை இல்லை என முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைப் பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளது.இதேவேளை, பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஏற்க மறுத்துள்ள யோஷித ராஜபக்ஷ, தாம் குற்றவாளியல்ல என இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.குறித்த குற்றச்சாட்டுகள் திறந்த நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டபோதே அவர் இவ்வாறு தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement