• Nov 04 2026

கொழும்புக்கு அதிகரித்த நாடாளுமன்ற ஆசனங்கள்! பதுளைக்கு குறைப்பு – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

Chithra / Nov 3rd 2026, 12:19 pm
image


2026ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பதிவேடுகளின் அடிப்படையில், கொழும்பு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 18 இலிருந்து 19 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், பதுளை மாவட்டத்திற்கான ஆசனங்களின் எண்ணிக்கை 9 இலிருந்து 8 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.


தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பிலேயே இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2026ஆம் ஆண்டிற்கான பிரதான வாக்காளர் பெயர்ப் பட்டியல் மற்றும் 2026 (1) ஆம் ஆண்டிற்கான துணை வாக்காளர் பட்டியல் ஆகியவற்றின் அடிப்படையில், ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நாடாளுமன்ற ஆசனங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.


இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 98(8) ஆம் உறுப்புரைக்கு அமைவாக, ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்தும் தெரிவு செய்யப்பட வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.


இதற்கான 2511/02 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த ஒக்டோபர் 19ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


இதன்படி, வாக்காளர் பதிவேடுகளின் அடிப்படையில் நாடாளுமன்ற ஆசன ஒதுக்கீட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கொழும்புக்கு அதிகரித்த நாடாளுமன்ற ஆசனங்கள் பதுளைக்கு குறைப்பு – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு 2026ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பதிவேடுகளின் அடிப்படையில், கொழும்பு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 18 இலிருந்து 19 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், பதுளை மாவட்டத்திற்கான ஆசனங்களின் எண்ணிக்கை 9 இலிருந்து 8 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பிலேயே இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.2026ஆம் ஆண்டிற்கான பிரதான வாக்காளர் பெயர்ப் பட்டியல் மற்றும் 2026 (1) ஆம் ஆண்டிற்கான துணை வாக்காளர் பட்டியல் ஆகியவற்றின் அடிப்படையில், ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நாடாளுமன்ற ஆசனங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 98(8) ஆம் உறுப்புரைக்கு அமைவாக, ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்தும் தெரிவு செய்யப்பட வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.இதற்கான 2511/02 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த ஒக்டோபர் 19ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இதன்படி, வாக்காளர் பதிவேடுகளின் அடிப்படையில் நாடாளுமன்ற ஆசன ஒதுக்கீட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement