இந்தியாவில் வசித்து வரும் இலங்கைத் தமிழ் அகதிகள் மீண்டும் தாயகம் திரும்ப விரும்பினால், அவர்களுக்கான ஏற்பாடுகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வலியுறுத்தியதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று திங்கட்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கடந்த வாரம் தமிழ்நாடு மற்றும் புதுடெல்லிக்கு விஜயம் செய்திருந்தபோது, பல்வேறு அரசியல் தலைவர்களைச் சந்தித்து இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, தமிழ் மக்களின் அரசியல் தீர்வு முயற்சிகளில் ஏற்பட்டுள்ள தாமதம், காணிப் பிரச்சினைகள், ஆலயங்கள் தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்தால் ஏற்படும் நெருக்கடிகள்,
பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாகக் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டம் மற்றும் மாகாண சபைத் தேர்தலின் நிச்சயமற்ற நிலைமை உள்ளிட்ட விடயங்களை இந்தியத் தரப்பிடம் எடுத்துரைத்ததாகக் குறிப்பிட்டார்.
இதன்போது, திருகோணமலை சிவன் ஆலயம் தொடர்பான தொல்பொருள் திணைக்களத்தின் நடவடிக்கைகள் மற்றும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கமளித்ததாகத் தெரிவித்தார்.
தமது கருத்துக்களைக் கேட்டறிந்த இந்திய நிதியமைச்சர், இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுசெல்வதாக உறுதியளித்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், வடக்கு, கிழக்கில் இந்தியாவின் உதவியுடன் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் கட்டுமானப் பணிகளை மீண்டும் முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.
அத்துடன், இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளில் தாயகம் திரும்ப விரும்புவோருக்கு உரிய ஏற்பாடுகளைச் செய்யவும், இலங்கை திரும்ப விரும்பாதவர்களுக்கு இந்தியாவில் நிரந்தரக் குடியுரிமை பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரியதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பிலும் கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள். தாயகம் திரும்ப விரும்புவோருக்கு புதிய ஏற்பாடுகள் இந்தியாவில் வசித்து வரும் இலங்கைத் தமிழ் அகதிகள் மீண்டும் தாயகம் திரும்ப விரும்பினால், அவர்களுக்கான ஏற்பாடுகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வலியுறுத்தியதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பில் நேற்று திங்கட்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.கடந்த வாரம் தமிழ்நாடு மற்றும் புதுடெல்லிக்கு விஜயம் செய்திருந்தபோது, பல்வேறு அரசியல் தலைவர்களைச் சந்தித்து இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்தார்.குறிப்பாக, தமிழ் மக்களின் அரசியல் தீர்வு முயற்சிகளில் ஏற்பட்டுள்ள தாமதம், காணிப் பிரச்சினைகள், ஆலயங்கள் தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்தால் ஏற்படும் நெருக்கடிகள், பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாகக் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டம் மற்றும் மாகாண சபைத் தேர்தலின் நிச்சயமற்ற நிலைமை உள்ளிட்ட விடயங்களை இந்தியத் தரப்பிடம் எடுத்துரைத்ததாகக் குறிப்பிட்டார்.இதன்போது, திருகோணமலை சிவன் ஆலயம் தொடர்பான தொல்பொருள் திணைக்களத்தின் நடவடிக்கைகள் மற்றும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கமளித்ததாகத் தெரிவித்தார்.தமது கருத்துக்களைக் கேட்டறிந்த இந்திய நிதியமைச்சர், இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுசெல்வதாக உறுதியளித்ததாகவும் அவர் கூறினார்.மேலும், வடக்கு, கிழக்கில் இந்தியாவின் உதவியுடன் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் கட்டுமானப் பணிகளை மீண்டும் முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.அத்துடன், இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளில் தாயகம் திரும்ப விரும்புவோருக்கு உரிய ஏற்பாடுகளைச் செய்யவும், இலங்கை திரும்ப விரும்பாதவர்களுக்கு இந்தியாவில் நிரந்தரக் குடியுரிமை பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரியதாக அவர் மேலும் தெரிவித்தார்.இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பிலும் கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டார்.