• Mar 06 2025

உள்ளூராட்சி சபை தேர்தலில் திருமலையில் ஐ.தே.கட்சி ஐந்து சபைகளை கைப்பற்றும்- அப்துல்லா மஹ்ரூப் நம்பிக்கை..!

Sharmi / Mar 5th 2025, 5:08 pm
image

எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஐந்து சபைகளை கைப்பற்றும் என அக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தவிசாளரும், முன்னாள்  பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.

கிண்ணியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று(05) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வாக்குறுதி அளிக்கப்பட்ட மக்கள் மத்தியிலே இன்று பெரும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் முஸ்லிம் சமூகம் தங்களுடைய இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கு இந்த தேசிய அரசாங்கத்திலே அவர்களுடைய கோரிக்கைகள் அத்தனையும் நிராகரிக்கப்பட்டு இனவாதமாக மதவாதமாக முன்வைத்து அவருடைய பிரசாரத்தை கொண்டு செல்வதன் காரணமாக முஸ்லிம் சமூகம் இம்முறை வித்தியாசமான முடிவை எடுக்குமளவுக்கு மாறியுள்ளார்கள்.

நீண்ட காலமாக இருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியில் யானை சின்னத்திலே போட்டியிடுவதற்கான அதிக வேட்பாளர்களின் ஆர்வமாக உள்ளது.

கூடுதலான தமிழ் சிங்கள முஸ்லிம் பிரதேசங்களில் பெரும்பான்மை சிங்கள மக்களுடன் சிறுபான்மை சமூகமும் இணைந்து இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் சபைகளை கூடுதலாக கைப்பற்றும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது 

திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளூர் ஆட்சி மன்றங்களிலே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற ஐந்து உள்ளூராட்சி சபைகளை  ஐக்கிய தேசியக் கட்சி இந்த உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை எனவும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபை தேர்தலில் திருமலையில் ஐ.தே.கட்சி ஐந்து சபைகளை கைப்பற்றும்- அப்துல்லா மஹ்ரூப் நம்பிக்கை. எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஐந்து சபைகளை கைப்பற்றும் என அக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தவிசாளரும், முன்னாள்  பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.கிண்ணியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று(05) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.வாக்குறுதி அளிக்கப்பட்ட மக்கள் மத்தியிலே இன்று பெரும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.அதே நேரத்தில் முஸ்லிம் சமூகம் தங்களுடைய இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கு இந்த தேசிய அரசாங்கத்திலே அவர்களுடைய கோரிக்கைகள் அத்தனையும் நிராகரிக்கப்பட்டு இனவாதமாக மதவாதமாக முன்வைத்து அவருடைய பிரசாரத்தை கொண்டு செல்வதன் காரணமாக முஸ்லிம் சமூகம் இம்முறை வித்தியாசமான முடிவை எடுக்குமளவுக்கு மாறியுள்ளார்கள்.நீண்ட காலமாக இருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியில் யானை சின்னத்திலே போட்டியிடுவதற்கான அதிக வேட்பாளர்களின் ஆர்வமாக உள்ளது.கூடுதலான தமிழ் சிங்கள முஸ்லிம் பிரதேசங்களில் பெரும்பான்மை சிங்கள மக்களுடன் சிறுபான்மை சமூகமும் இணைந்து இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் சபைகளை கூடுதலாக கைப்பற்றும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளூர் ஆட்சி மன்றங்களிலே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற ஐந்து உள்ளூராட்சி சபைகளை  ஐக்கிய தேசியக் கட்சி இந்த உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement