• May 08 2025

நாட்டில் வருடாந்தம் சுமார் 1200 சிறுவர்கள் புற்றுநோயாளர்களாக அடையாளம்

Chithra / Feb 14th 2025, 7:41 am
image

 

வருடாந்தம் சுமார் 1200 சிறுவர்கள் புற்றுநோயாளர்களாக அடையாளம் காணப்படுவதாக சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களில் பெரும்பாலானோர், நிணநீர் சுரப்பி புற்றுநோய், எலும்பு புற்றுநோய் மற்றும் மூளை புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இவர்களில் வருடாந்தம் சுமார் 250 சிறார்கள் உயிரிழப்பதாகவும் தேசிய புற்றுநோய் ஒழிப்பு திட்டத்தின் சமூக விசேட வைத்திய நிபுணர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.

குழந்தை பருவத்தில் ஏற்படும் புற்றுநோயை தடுப்பதற்கான இயலுமை குறைவாக உள்ளதாகவும் சமூக வைத்திய நிபுணர் கூறியுள்ளார்.

குழந்தை பருவ புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விரைவில் அதற்கான சிகிச்சைகளை உரிய முறையில் பெற்றுக்கொள்வதன் மூலம் அதனை இலகுவில் குணப்படுத்தலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் வருடாந்தம் சுமார் 1200 சிறுவர்கள் புற்றுநோயாளர்களாக அடையாளம்  வருடாந்தம் சுமார் 1200 சிறுவர்கள் புற்றுநோயாளர்களாக அடையாளம் காணப்படுவதாக சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது.அவர்களில் பெரும்பாலானோர், நிணநீர் சுரப்பி புற்றுநோய், எலும்பு புற்றுநோய் மற்றும் மூளை புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை இவர்களில் வருடாந்தம் சுமார் 250 சிறார்கள் உயிரிழப்பதாகவும் தேசிய புற்றுநோய் ஒழிப்பு திட்டத்தின் சமூக விசேட வைத்திய நிபுணர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.குழந்தை பருவத்தில் ஏற்படும் புற்றுநோயை தடுப்பதற்கான இயலுமை குறைவாக உள்ளதாகவும் சமூக வைத்திய நிபுணர் கூறியுள்ளார்.குழந்தை பருவ புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விரைவில் அதற்கான சிகிச்சைகளை உரிய முறையில் பெற்றுக்கொள்வதன் மூலம் அதனை இலகுவில் குணப்படுத்தலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now