• Feb 21 2025

இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா? வெளியான அறிவிப்பு

Chithra / Feb 14th 2025, 7:51 am
image

 

நாட்டில் அமுலாக்கப்பட்ட தற்காலிக மின்வெட்டு இன்று முதல் அமுல்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவைப்படின் மாத்திரம் முன்னறிவித்தலுடன் மின்வெட்டு இடம்பெறும் என்று மின்வலு அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக, நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில் உள்ள மூன்று மின் பிறப்பாக்கிகள் செயலிழந்திருந்தன.

இதன் விளைவாக, மின்சார தேவையை நிர்வகிக்க முடியாததால், திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் ஒன்றரை மணி நேர மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்தது.

இருப்பினும், பௌர்ணமி தினம் என்பதால் நேற்றுமுன்தினம் மின்வெட்டு  மேற்கொள்ளப்படவில்லை.


இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா வெளியான அறிவிப்பு  நாட்டில் அமுலாக்கப்பட்ட தற்காலிக மின்வெட்டு இன்று முதல் அமுல்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.தேவைப்படின் மாத்திரம் முன்னறிவித்தலுடன் மின்வெட்டு இடம்பெறும் என்று மின்வலு அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த ஞாயிற்றுக்கிழமை, நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக, நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில் உள்ள மூன்று மின் பிறப்பாக்கிகள் செயலிழந்திருந்தன.இதன் விளைவாக, மின்சார தேவையை நிர்வகிக்க முடியாததால், திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் ஒன்றரை மணி நேர மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்தது.இருப்பினும், பௌர்ணமி தினம் என்பதால் நேற்றுமுன்தினம் மின்வெட்டு  மேற்கொள்ளப்படவில்லை.

Advertisement

Advertisement

Advertisement