மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்றில் வெள்ளநீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையில் வெல்லாவெளி மண்டூர் பிரதான வீதியினை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதனால் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில் குருமன்வெளி மண்டூர் படகுப் பாதை சேவையினூடாக அதிகளவான பிரயாணிகள் பாதுகாப்பு அங்கி அணியாமல் வருகை தந்த நிலையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் அப்பகுதிக்குச் சென்று பலத்த காற்றுவீசுவதன் காரணமாகவும் அனர்த்தங்களைக் குறைத்து கொள்ளும் வகையில் பாதுகாப்பு அங்கி அணிந்து படகுப் பாதையில் பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
மட்டக்களப்பில் தொடர்ச்சியாக பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக வீடொன்றில் மீது தென்னைமரம் ஒன்று விழுந்ததில் வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
மேலும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட, எருவில், குருமன்வெளி, பட்டிருப்பு, போன்ற கிராமங்களில் தாழ்நிலப் பகுதியிலில் வெள்ளநீர் வடிந்தோடக்கூடிய வகையில் தற்காலிக வடிகால் அமைக்கும் பணி பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பில் வெள்ள நீரை வழிந்தோடும் நடவடிக்கை துரிதமாக முன்னெடுப்பு மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்றில் வெள்ளநீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனிடையில் வெல்லாவெளி மண்டூர் பிரதான வீதியினை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதனால் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில் குருமன்வெளி மண்டூர் படகுப் பாதை சேவையினூடாக அதிகளவான பிரயாணிகள் பாதுகாப்பு அங்கி அணியாமல் வருகை தந்த நிலையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் அப்பகுதிக்குச் சென்று பலத்த காற்றுவீசுவதன் காரணமாகவும் அனர்த்தங்களைக் குறைத்து கொள்ளும் வகையில் பாதுகாப்பு அங்கி அணிந்து படகுப் பாதையில் பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.மட்டக்களப்பில் தொடர்ச்சியாக பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக வீடொன்றில் மீது தென்னைமரம் ஒன்று விழுந்ததில் வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.மேலும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட, எருவில், குருமன்வெளி, பட்டிருப்பு, போன்ற கிராமங்களில் தாழ்நிலப் பகுதியிலில் வெள்ளநீர் வடிந்தோடக்கூடிய வகையில் தற்காலிக வடிகால் அமைக்கும் பணி பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.