கண்டி- நுவரெலியா பிரதான வீதி, கெரண்டியெல்ல பகுதியிலிருந்து வாகனப் போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிலவும் பாதகமான காலநிலை காரணமாக, கெரண்டியெல்ல பகுதியில் பாறைகள் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதால் இந்த வீதிகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
அதற்கமைய, நுவரெலியாவிற்குச் செல்லும் வாகனங்கள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு கொத்மலை பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை சோமாவதி - சுங்காவில வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதையடுத்து, குறித்த வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையால் இந்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சோமாவதி - சுங்காவில வீதியின் திக்கல பிரதேசத்தில் 35 முதல் 37 வரையான கிலோமீற்றர் தூண்களுக்கு இடைப்பட்ட பகுதி தற்போது சுமார் 02 அடி நீரில் மூழ்கியுள்ளது.
இந்த வெள்ள நிலையை கருத்தில் கொண்டு, வரலாற்று சிறப்புமிக்க சோமாவதி புனித பூமிக்கு வழிபாட்டிற்காக வரும் பக்தர்கள் இந்த சில நாட்களைக் கடந்த பின்னர் வருகை தருமாறும், மகாவலி கங்கையின் இரு மருங்கிலும் வசிக்கும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால் அவசரமாக மூடப்பட்ட வீதிகள் கண்டி- நுவரெலியா பிரதான வீதி, கெரண்டியெல்ல பகுதியிலிருந்து வாகனப் போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிலவும் பாதகமான காலநிலை காரணமாக, கெரண்டியெல்ல பகுதியில் பாறைகள் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதால் இந்த வீதிகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுஅதற்கமைய, நுவரெலியாவிற்குச் செல்லும் வாகனங்கள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு கொத்மலை பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதேவேளை சோமாவதி - சுங்காவில வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதையடுத்து, குறித்த வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையால் இந்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சோமாவதி - சுங்காவில வீதியின் திக்கல பிரதேசத்தில் 35 முதல் 37 வரையான கிலோமீற்றர் தூண்களுக்கு இடைப்பட்ட பகுதி தற்போது சுமார் 02 அடி நீரில் மூழ்கியுள்ளது. இந்த வெள்ள நிலையை கருத்தில் கொண்டு, வரலாற்று சிறப்புமிக்க சோமாவதி புனித பூமிக்கு வழிபாட்டிற்காக வரும் பக்தர்கள் இந்த சில நாட்களைக் கடந்த பின்னர் வருகை தருமாறும், மகாவலி கங்கையின் இரு மருங்கிலும் வசிக்கும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.