• Nov 26 2025

நெடுங்கேணியில் கடும் மழை; வைத்தியசாலை செயற்பாடுகள் ஸ்தம்பிதம்!

Chithra / Nov 26th 2025, 8:50 pm
image


வவுனியா - நெடுங்கேணியில் இன்று மாலை பெய்த கடும் மழை காரணமாக நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.

இதனால் வைத்தியசாலையின் செயற்பாடுகள்  ஸ்தம்பிதமடைந்துள்ளது. 

வெள்ளப் பாதிப்பால் குறித்த மருத்துவமனையின் சேவைகள் தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவசர சேவைகள் மாத்திரம் செயல்பட்டுவருகின்றது. 

எனவே ஏனைய சுகாதார சேவைகள் தேவையானவர்கள், அருகிலுள்ள மருத்துவமனைகளை பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

வவுனியாவில் கடந்த இரு தினங்களாக தொடர்ச்சியாக மழையுடனான காலநிலை நிலவி வருகின்றமையால் தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதுடன் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

நெடுங்கேணியில் கடும் மழை; வைத்தியசாலை செயற்பாடுகள் ஸ்தம்பிதம் வவுனியா - நெடுங்கேணியில் இன்று மாலை பெய்த கடும் மழை காரணமாக நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.இதனால் வைத்தியசாலையின் செயற்பாடுகள்  ஸ்தம்பிதமடைந்துள்ளது. வெள்ளப் பாதிப்பால் குறித்த மருத்துவமனையின் சேவைகள் தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவசர சேவைகள் மாத்திரம் செயல்பட்டுவருகின்றது. எனவே ஏனைய சுகாதார சேவைகள் தேவையானவர்கள், அருகிலுள்ள மருத்துவமனைகளை பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.வவுனியாவில் கடந்த இரு தினங்களாக தொடர்ச்சியாக மழையுடனான காலநிலை நிலவி வருகின்றமையால் தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதுடன் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement