முல்லைத்தீவு - விசுவமடு இளைஞர்கள் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனின் 71ஆவது பிறந்தநாளை கேக் வெட்டி இன்றையதினம் மாலை சிறப்பாகக் கொண்டாடினர்.
இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தபிசாளர் வேலாயுதம் கரிகாலனும் கலந்து கொண்டு கேக் வெட்டி இளைஞர்களுடன் இணைந்தார்.
அவ் வீதியால் சென்ற பொதுமக்களுக்கு கேக் வழங்கி, தலைவரின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இளைஞர்கள் விழாவை மகிழ்வோடு கொண்டாடியிருந்தனர்.
இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் 71 ஆவது பிறந்த தினம் இன்று நல்லூரில் கொண்டாடப்பட்டது.
நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அமைந்துள்ள நினைவாலயத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது பொங்கல் பொங்கி மக்களுக்கு பரிமாறப்பட்டது, அத்தோடு கேக், இனிப்பு மற்றும் மர கான்றுகள் உள்ளிட்டவையும் மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
தமிழர் பகுதியெங்கும் சிறப்பாக கொண்டாடப்பட்ட பிரபாகரனின் பிறந்தநாள் முல்லைத்தீவு - விசுவமடு இளைஞர்கள் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனின் 71ஆவது பிறந்தநாளை கேக் வெட்டி இன்றையதினம் மாலை சிறப்பாகக் கொண்டாடினர்.இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தபிசாளர் வேலாயுதம் கரிகாலனும் கலந்து கொண்டு கேக் வெட்டி இளைஞர்களுடன் இணைந்தார்.அவ் வீதியால் சென்ற பொதுமக்களுக்கு கேக் வழங்கி, தலைவரின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இளைஞர்கள் விழாவை மகிழ்வோடு கொண்டாடியிருந்தனர்.இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் 71 ஆவது பிறந்த தினம் இன்று நல்லூரில் கொண்டாடப்பட்டது.நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அமைந்துள்ள நினைவாலயத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.இதன்போது பொங்கல் பொங்கி மக்களுக்கு பரிமாறப்பட்டது, அத்தோடு கேக், இனிப்பு மற்றும் மர கான்றுகள் உள்ளிட்டவையும் மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.