ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களினால் முன்வைக்கப்பட்டுள்ள விஞ்ஞாபனத்தில் மது, புகையிலை, சிகரெட் மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவில்லை என மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) தெரிவித்துள்ளது.
மதுபானம், புகையிலை, சிகரெட் மற்றும் போதைப்பொருள் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான விஞ்ஞான அடிப்படையிலான 12 யோசனைகளை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் தமது அமைப்பு முன்வைத்ததாக அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சம்பத் டி சேரம் தெரிவித்தார்.
பிரேரணை தொடர்பில், வேட்பாளர்கள் பலர் தமது விஞ்ஞாபனத்தில் ஒரு சில முன்மொழிவுகளையே உள்ளடக்கியுள்ளதாகவும், மதுபானம், புகையிலை மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான கொள்கைகளை வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கியிருப்பதையிட்டு ஒரு நாடு என்ற வகையில் நாம் மகிழ்ச்சியடைய முடியாது.
மது, சிகரெட் போன்ற போதைப்பொருள்கள் நாட்டின் முக்கியப் பிரச்சினைகளில் ஒன்றாக மாறியுள்ளதாகவும், அதனைக் கட்டுப்படுத்துவது மக்களின் ஆரோக்கியம், பொருளாதாரம், சமூகம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு மிகவும் அவசியமானது எனவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மத்தியில், பிரதான வேட்பாளர்களால் முன்வைக்கப்பட்ட விஞ்ஞாபனங்களில் மது, புகையிலை, சிகரெட் மற்றும் போதைப்பொருள் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ள விதத்தை தமது நிறுவனம் அவதானித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பில் பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் புறக்கணிப்பு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களினால் முன்வைக்கப்பட்டுள்ள விஞ்ஞாபனத்தில் மது, புகையிலை, சிகரெட் மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவில்லை என மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) தெரிவித்துள்ளது.மதுபானம், புகையிலை, சிகரெட் மற்றும் போதைப்பொருள் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான விஞ்ஞான அடிப்படையிலான 12 யோசனைகளை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் தமது அமைப்பு முன்வைத்ததாக அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சம்பத் டி சேரம் தெரிவித்தார்.பிரேரணை தொடர்பில், வேட்பாளர்கள் பலர் தமது விஞ்ஞாபனத்தில் ஒரு சில முன்மொழிவுகளையே உள்ளடக்கியுள்ளதாகவும், மதுபானம், புகையிலை மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான கொள்கைகளை வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கியிருப்பதையிட்டு ஒரு நாடு என்ற வகையில் நாம் மகிழ்ச்சியடைய முடியாது.மது, சிகரெட் போன்ற போதைப்பொருள்கள் நாட்டின் முக்கியப் பிரச்சினைகளில் ஒன்றாக மாறியுள்ளதாகவும், அதனைக் கட்டுப்படுத்துவது மக்களின் ஆரோக்கியம், பொருளாதாரம், சமூகம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு மிகவும் அவசியமானது எனவும் அவர் தெரிவித்தார்.ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மத்தியில், பிரதான வேட்பாளர்களால் முன்வைக்கப்பட்ட விஞ்ஞாபனங்களில் மது, புகையிலை, சிகரெட் மற்றும் போதைப்பொருள் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ள விதத்தை தமது நிறுவனம் அவதானித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.