• Feb 07 2025

மட்டக்களப்பில் கோர விபத்து! ஒருவர் சம்பவ இடத்தில் பலி; ஆபத்தான நிலையில் ஒருவர்

Chithra / Feb 6th 2025, 7:10 am
image


மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமுக்கு முன்பாக, பெட்ரோலியப்பொருட்கள் ஏற்றிச்சென்ற பவுசருடன் துவிச்சக்கர வண்டி மோதியே இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேவாரபுரம் பகுதியில் இருந்து துவிச்சக்கர வண்டியில் பிரதான வீதியை கடக்க முற்பட்ட இருவர் மீதே பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான பவுசர் மோதியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்தவர் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் சித்தாண்டி முருகன் கோயில் பகுதியை சேர்ந்த வீரக்குட்டி ரமேஷ் என்ற 39  வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதனடிப்படையில் பவுசர் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பில் கோர விபத்து ஒருவர் சம்பவ இடத்தில் பலி; ஆபத்தான நிலையில் ஒருவர் மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமுக்கு முன்பாக, பெட்ரோலியப்பொருட்கள் ஏற்றிச்சென்ற பவுசருடன் துவிச்சக்கர வண்டி மோதியே இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தேவாரபுரம் பகுதியில் இருந்து துவிச்சக்கர வண்டியில் பிரதான வீதியை கடக்க முற்பட்ட இருவர் மீதே பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான பவுசர் மோதியுள்ளதாக தெரியவந்துள்ளது.இந்த விபத்தில் படுகாயமடைந்தவர் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.உயிரிழந்தவரின் சடலம் மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவர் சித்தாண்டி முருகன் கோயில் பகுதியை சேர்ந்த வீரக்குட்டி ரமேஷ் என்ற 39  வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இதனடிப்படையில் பவுசர் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement