ஸ்டேட் நியோனைஸ் மற்றும் வடுஸ் இடையேயான 15ஆவது சுற்றின் சேலஞ்ச் லீக் ஆட்டத்தின் போது,
நியோனின் வீரர் ஒருவர் விபத்துக்குள்ளாகியுள்ளார். வடுஸைச் சேர்ந்த லார்ஸ் ட்ராபர்,
போட்டியின் 5ஆவது நிமிடத்தில் நியோனின் கேப்டன் அட்ரியானோ டி பியர்ரோவை,
தற்செயலாக தனது காலால் தலையில் உதைத்துள்ளார்.
இதனால் 33 வயதான அவர் மைதானத்தில் சுயநினைவு இன்றி கீழே விழுந்துள்ளார்.
பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
நியோனைஸின் தகவல் தொடர்பு மேலாளர் ,
அம்புலன்ஸ் வரும் வரை டி பியர்ரோ சுயநினைவின்றி இருந்தார்,
ஆனால் நிலையான இதயத் துடிப்பு இருந்தது என்று குறிப்பிட்டார்.
பின்னர் அவர் மருத்துவமனைக்கு வந்தபோது, மீண்டும் சுயநினைவுடன் இருந்தார் என தெரிவித்துள்ளார்.
கால்பந்து போட்டியில் விபத்தில் சிக்கிய - சுவிஸ் வீரர் ஸ்டேட் நியோனைஸ் மற்றும் வடுஸ் இடையேயான 15ஆவது சுற்றின் சேலஞ்ச் லீக் ஆட்டத்தின் போது,நியோனின் வீரர் ஒருவர் விபத்துக்குள்ளாகியுள்ளார். வடுஸைச் சேர்ந்த லார்ஸ் ட்ராபர், போட்டியின் 5ஆவது நிமிடத்தில் நியோனின் கேப்டன் அட்ரியானோ டி பியர்ரோவை,தற்செயலாக தனது காலால் தலையில் உதைத்துள்ளார்.இதனால் 33 வயதான அவர் மைதானத்தில் சுயநினைவு இன்றி கீழே விழுந்துள்ளார். பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.நியோனைஸின் தகவல் தொடர்பு மேலாளர் , அம்புலன்ஸ் வரும் வரை டி பியர்ரோ சுயநினைவின்றி இருந்தார், ஆனால் நிலையான இதயத் துடிப்பு இருந்தது என்று குறிப்பிட்டார்.பின்னர் அவர் மருத்துவமனைக்கு வந்தபோது, மீண்டும் சுயநினைவுடன் இருந்தார் என தெரிவித்துள்ளார்.