• Dec 09 2024

யாழ் வல்வையில் விபத்து- ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழப்பு..!

Sharmi / Oct 12th 2024, 1:23 pm
image

யாழ்ப்பாணம் வல்வை பாலத்துக்கு அருகில் இன்று(12) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வடமராட்சி பகுதியில் இருந்து யாழ் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், பழைய இரும்பு ஏற்றும் பட்டா வாகனமும் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதியதில்  குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




யாழ் வல்வையில் விபத்து- ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழப்பு. யாழ்ப்பாணம் வல்வை பாலத்துக்கு அருகில் இன்று(12) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வடமராட்சி பகுதியில் இருந்து யாழ் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், பழைய இரும்பு ஏற்றும் பட்டா வாகனமும் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதியதில்  குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement