• Oct 29 2025

நாளை நீதிமன்றத்தில் ஆஜராகும் முன்னாள் ஜனாதிபதி ரணில்!

Chithra / Oct 28th 2025, 7:06 pm
image


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீதான ஊழல் வழக்கு நாளை (29) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

வெளிநாட்டுப் பயணத்தின்போது அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஒகஸ்ட் மாதம் ரணில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர், விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் அவரது உடல்நலம் மோசமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, விசாரணைக்காக Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

இதன்போது தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 3 சரீரப் பிணைகளில் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. 

நாளை நீதிமன்றத்தில் ஆஜராகும் முன்னாள் ஜனாதிபதி ரணில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீதான ஊழல் வழக்கு நாளை (29) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.வெளிநாட்டுப் பயணத்தின்போது அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஒகஸ்ட் மாதம் ரணில் கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்டவர், விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் அவரது உடல்நலம் மோசமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.இதனைத் தொடர்ந்து, விசாரணைக்காக Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையானார்.இதன்போது தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 3 சரீரப் பிணைகளில் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement