திருகோணமலை ஸ்ரீசண்முக இந்து மகளிர் கல்லூரிக்கு முன்பாக கடந்த ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக ஆராய்ந்து, குற்றவாளிகளைக் கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று குறித்த இருவரும் பொலிஸாரின் பிடியில் சிக்கியுள்ளனர்.
சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் முச்சக்கர வண்டியை கைப்பற்றுவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரியவருகின்றது.
அதுமட்டுமல்லாமல், மீண்டும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்காக சில கண்காணிப்பு மற்றும் தகவல் திரட்டும் நடவடிக்கைகளும் பிரதேசத்தில் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனவே, பாடசாலை விடுகின்ற நேரங்களில் சம்பந்தம் இல்லாதவர்கள் அப்பகுதிகளில் அலைந்து திரிவதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வன்முறைக் குற்றவாளிகளுக்கு எதிராகப் பொலிஸாரின் நடவடிக்கை தொடரும் எனவும், பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பில் விசேட கவனம்; பொலிஸாரின் பிடியில் சிக்கிய இருவர் திருகோணமலை ஸ்ரீசண்முக இந்து மகளிர் கல்லூரிக்கு முன்பாக கடந்த ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக ஆராய்ந்து, குற்றவாளிகளைக் கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று குறித்த இருவரும் பொலிஸாரின் பிடியில் சிக்கியுள்ளனர்.சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் முச்சக்கர வண்டியை கைப்பற்றுவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரியவருகின்றது.அதுமட்டுமல்லாமல், மீண்டும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்காக சில கண்காணிப்பு மற்றும் தகவல் திரட்டும் நடவடிக்கைகளும் பிரதேசத்தில் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.எனவே, பாடசாலை விடுகின்ற நேரங்களில் சம்பந்தம் இல்லாதவர்கள் அப்பகுதிகளில் அலைந்து திரிவதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வன்முறைக் குற்றவாளிகளுக்கு எதிராகப் பொலிஸாரின் நடவடிக்கை தொடரும் எனவும், பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.