• Jan 28 2026

கணக்காய்வாளர் நாயகம் பதவி: மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

Chithra / Jan 27th 2026, 8:59 pm
image


கடந்த 8 மாத காலப்பகுதியில் நிரந்தர கணக்காய்வாளர் நாயகம் ஒருவரை நியமிக்க முடியாமை மற்றும் பதில் கணக்காய்வாளர் நாயகத்தின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும் இதுவரை எவரும் நியமிக்கப்படாமை காரணமாக, பல்வேறு தரப்பினர் அரச நிதி மேலாண்மை குறித்து சர்ச்சைகளை ஏற்படுத்த முயற்சிப்பதாக மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர். 

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்கும் பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து எதிர்மறையான கருத்துக்களை சமூகமயப்படுத்த சில தரப்பினர் இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்தி வருவதாக மகாநாயக்க தேரர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

மேலும், அரச நிதி மேலாண்மையின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் பாரிய பொறுப்பு வாய்ந்த கணக்காய்வாளர் நாயகம் போன்ற பதவிக்கு, கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்திற்கு வெளியேயுள்ள ஒரு அதிகாரியை நியமிப்பது பொருத்தமற்றது எனவும் அவர்கள் அக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர். 

எனவே, கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தில் நீண்டகாலம் பணியாற்றிய அனுபவம் மிக்க சிரேஷ்ட அதிகாரியான தர்மபால கம்மன்பிலவை கணக்காய்வாளர் நாயகப் பதவிக்கு நியமிப்பதே பொருத்தமானது எனவும், அது ஜனாதிபதி முன்னெடுக்கும் நாட்டை வளப்படுத்தும் செயற்திட்டத்திற்கு வலுவூட்டும் எனவும் மகாநாயக்க தேரர்கள் தமது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளனர்.

கணக்காய்வாளர் நாயகம் பதவி: மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் கடந்த 8 மாத காலப்பகுதியில் நிரந்தர கணக்காய்வாளர் நாயகம் ஒருவரை நியமிக்க முடியாமை மற்றும் பதில் கணக்காய்வாளர் நாயகத்தின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும் இதுவரை எவரும் நியமிக்கப்படாமை காரணமாக, பல்வேறு தரப்பினர் அரச நிதி மேலாண்மை குறித்து சர்ச்சைகளை ஏற்படுத்த முயற்சிப்பதாக மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்கும் பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து எதிர்மறையான கருத்துக்களை சமூகமயப்படுத்த சில தரப்பினர் இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்தி வருவதாக மகாநாயக்க தேரர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், அரச நிதி மேலாண்மையின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் பாரிய பொறுப்பு வாய்ந்த கணக்காய்வாளர் நாயகம் போன்ற பதவிக்கு, கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்திற்கு வெளியேயுள்ள ஒரு அதிகாரியை நியமிப்பது பொருத்தமற்றது எனவும் அவர்கள் அக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தில் நீண்டகாலம் பணியாற்றிய அனுபவம் மிக்க சிரேஷ்ட அதிகாரியான தர்மபால கம்மன்பிலவை கணக்காய்வாளர் நாயகப் பதவிக்கு நியமிப்பதே பொருத்தமானது எனவும், அது ஜனாதிபதி முன்னெடுக்கும் நாட்டை வளப்படுத்தும் செயற்திட்டத்திற்கு வலுவூட்டும் எனவும் மகாநாயக்க தேரர்கள் தமது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement