• Jan 28 2026

பொலிஸாருக்கு மதுபானம் விற்பனை செய்ய முயன்றவர் யாழில் கைது!

Chithra / Jan 27th 2026, 8:48 pm
image

 

சட்டவிரோதமான முறையில் மதுபானத்தை வீட்டில் வைத்து விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

 பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு மதுபானத்தை விற்பனை செய்தபோதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜி.எம்.எச்.புத்திக்க சிறிவர்தனவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், சான்றுப் பொருட்களுடன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளார். 

அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிஸாருக்கு மதுபானம் விற்பனை செய்ய முயன்றவர் யாழில் கைது  சட்டவிரோதமான முறையில் மதுபானத்தை வீட்டில் வைத்து விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு மதுபானத்தை விற்பனை செய்தபோதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜி.எம்.எச்.புத்திக்க சிறிவர்தனவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.கைது செய்யப்பட்ட சந்தேகநபர், சான்றுப் பொருட்களுடன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளார். அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement