பத்தரமுல்லை பகுதியில் ஒரு பெரிய பொது ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு வலயத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட, தியவன்னா ஓயாவின் இரு கரைகளிலும் "உல்லாச தீவு பொழுதுபோக்கு மையம்" திட்டத்தை நகர அபிவிருத்தி அதிகார சபை ஆரம்பிக்கவுள்ளது.
இந்த திட்டத்திற்காக தியவன்னா ஓயாவை அண்மித்த 13.57 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட ஒன்பது காணித் துண்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் கொள்முதல் வழிகாட்டல்களுக்கு அமைய, சர்வதேச போட்டித்தன்மை வாய்ந்த ஏல நடைமுறையின் மூலம் இதற்கான முதலீட்டு முன்மொழிவுகளைக் கோருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அடையாளம் காணப்பட்ட ஒன்பது காணித் துண்டுகளும் பொழுதுபோக்கு மற்றும் ஓய்வுநேரச் செயல்பாடுகள் தொடர்பான திட்டங்களுக்காக நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்கப்படவுள்ளன.
இதேவேளை, தியவன்னா ஓயாவை அண்மித்த பத்தரமுல்லை சதுப்பு நிலப்பகுதியில் வெள்ளத் தடுப்பு மற்றும் அபிவிருத்திப் பணிகளை இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் ஏற்கனவே நிறைவு செய்துள்ளது.
குறிப்பாக, 'வோட்டர்ஸ் எட்ஜ்' (Waters Edge) விருந்தகத்தை சூழவுள்ள நீர்வழிகள் சீரமைக்கப்பட்டுள்ளன.
இது எதிர்கால பொழுதுபோக்குத் திட்டங்களுக்குப் பக்கபலமாக அமைவதோடு, திட்டப் பகுதியின் நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவுக்கே அமைச்சரவை தற்போது அனுமதி வழங்கியுள்ளது.
இதேவேளைநுவரெலியாவில் கிரெகரி வாவியை அண்டியுள்ள காணியில், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் நவீன தீம் பார்க் (பொழுதுபோக்கு பூங்கா) ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 10 ஏக்கர், 3 ரூட் மற்றும் 28.04 பேர்ச்சஸ் கொண்ட காணி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
பயன்படுத்தப்படாத அரச காணிகளை அபிவிருத்தி செய்வது குறித்து ஆராய அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட குழுவே, இந்த நிலப்பரப்பை சுற்றுலாத் திட்டத்திற்காகப் பயன்படுத்தப் பரிந்துரைத்துள்ளது.
அதன்படி, தகுதியான முதலீட்டாளருக்கு சர்வதேச போட்டித்தன்மை வாய்ந்த ஏல நடைமுறையின் கீழ் 50 ஆண்டுகளுக்கு இந்தக் காணி குத்தகைக்கு வழங்கப்படவுள்ளது.
வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில், பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக முதலீட்டு முன்மொழிவுகளைக் கோருவதற்கு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
பத்தரமுல்லையில் உல்லாசத் தீவு; நுவரெலியா புதிய தீம் பார்க் அரசின் திட்டங்கள் பத்தரமுல்லை பகுதியில் ஒரு பெரிய பொது ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு வலயத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட, தியவன்னா ஓயாவின் இரு கரைகளிலும் "உல்லாச தீவு பொழுதுபோக்கு மையம்" திட்டத்தை நகர அபிவிருத்தி அதிகார சபை ஆரம்பிக்கவுள்ளது.இந்த திட்டத்திற்காக தியவன்னா ஓயாவை அண்மித்த 13.57 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட ஒன்பது காணித் துண்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.அரசாங்கத்தின் கொள்முதல் வழிகாட்டல்களுக்கு அமைய, சர்வதேச போட்டித்தன்மை வாய்ந்த ஏல நடைமுறையின் மூலம் இதற்கான முதலீட்டு முன்மொழிவுகளைக் கோருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அடையாளம் காணப்பட்ட ஒன்பது காணித் துண்டுகளும் பொழுதுபோக்கு மற்றும் ஓய்வுநேரச் செயல்பாடுகள் தொடர்பான திட்டங்களுக்காக நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்கப்படவுள்ளன.இதேவேளை, தியவன்னா ஓயாவை அண்மித்த பத்தரமுல்லை சதுப்பு நிலப்பகுதியில் வெள்ளத் தடுப்பு மற்றும் அபிவிருத்திப் பணிகளை இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் ஏற்கனவே நிறைவு செய்துள்ளது.குறிப்பாக, 'வோட்டர்ஸ் எட்ஜ்' (Waters Edge) விருந்தகத்தை சூழவுள்ள நீர்வழிகள் சீரமைக்கப்பட்டுள்ளன.இது எதிர்கால பொழுதுபோக்குத் திட்டங்களுக்குப் பக்கபலமாக அமைவதோடு, திட்டப் பகுதியின் நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவுக்கே அமைச்சரவை தற்போது அனுமதி வழங்கியுள்ளது.இதேவேளைநுவரெலியாவில் கிரெகரி வாவியை அண்டியுள்ள காணியில், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் நவீன தீம் பார்க் (பொழுதுபோக்கு பூங்கா) ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 10 ஏக்கர், 3 ரூட் மற்றும் 28.04 பேர்ச்சஸ் கொண்ட காணி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.பயன்படுத்தப்படாத அரச காணிகளை அபிவிருத்தி செய்வது குறித்து ஆராய அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட குழுவே, இந்த நிலப்பரப்பை சுற்றுலாத் திட்டத்திற்காகப் பயன்படுத்தப் பரிந்துரைத்துள்ளது.அதன்படி, தகுதியான முதலீட்டாளருக்கு சர்வதேச போட்டித்தன்மை வாய்ந்த ஏல நடைமுறையின் கீழ் 50 ஆண்டுகளுக்கு இந்தக் காணி குத்தகைக்கு வழங்கப்படவுள்ளது.வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில், பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக முதலீட்டு முன்மொழிவுகளைக் கோருவதற்கு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.