• Jan 28 2026

திருமலையில் மாயமான மாணவன் காயங்களுடன் மீட்பு; கடத்தல்காரர்களிடமிருந்து தப்பி பொலிஸாரிடம் சரண்!

shanuja / Jan 27th 2026, 5:00 pm
image

திருகோணமலையில் நேற்று(26) காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த 17 வயதுடைய மாணவன், இன்று நிட்டம்புவ பகுதியில் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.


கடத்தல்காரர்களிடமிருந்து தப்பி ஓடிய மாணவன், பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்ததை அடுத்து இந்த மீட்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.


திருகோணமலை நீதிமன்ற வீதியைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணியின் மகனான எம்.எல்.முன்சித் என்ற மாணவனே இவ்வாறு காணாமல்போன நிலையில் மீட்கப்பட்டுள்ளார். 


நேற்று(26) பாடசாலைக்குச் சென்ற நிலையில் கடத்தப்பட்டதாகக் கருதப்படும் இம்மாணவன், கடத்தல்காரர்களிடமிருந்து தந்திரமாகத் தப்பித்து, நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்புத் தேடி சரணடைந்துள்ளார்.


மீட்கப்படும் போது மாணவனின் உடலில் அடி காயங்கள் காணப்பட்டதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இச்சம்பவம் குறித்து நிட்டம்புவ பொலிஸார் திருகோணமலையிலுள்ள மாணவனின் பெற்றோருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.


தகவலறிந்த பெற்றோர் தற்போது மாணவனைப் பார்ப்பதற்காக நிட்டம்புவ நோக்கி விரைந்துள்ளனர்.


நேற்று காலை பாடசாலைக்குச் சென்ற மாணவன் வீடு திரும்பாத நிலையில், சமுத்திரகம பகுதியில் அவரது சைக்கிள் மற்றும் புத்தகப்பை என்பன கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன. 


இதனைத் தொடர்ந்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையிலேயே, மாணவன் நிட்டம்புவையில் மீட்கப்பட்டுள்ளார்.


இதேவேளை, குறித்த மாணவருடன் தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட மற்றொரு தகவல் குறித்து பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.


திருகோணமலை பஸ் தரிப்பிடத்தில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட 22 வயதுடைய யுவதி ஒருவர், தனது காதலனுடன் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. 


இந்த யுவதியின் சம்பவத்திற்கும், மாணவன் கடத்தப்பட்ட சம்பவத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை என ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.


மாணவன் எதற்காகக் கடத்தப்பட்டார்? கடத்தல்காரர்கள் யார்? என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ மற்றும் திருகோணமலை பொலிஸார் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

திருமலையில் மாயமான மாணவன் காயங்களுடன் மீட்பு; கடத்தல்காரர்களிடமிருந்து தப்பி பொலிஸாரிடம் சரண் திருகோணமலையில் நேற்று(26) காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த 17 வயதுடைய மாணவன், இன்று நிட்டம்புவ பகுதியில் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.கடத்தல்காரர்களிடமிருந்து தப்பி ஓடிய மாணவன், பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்ததை அடுத்து இந்த மீட்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.திருகோணமலை நீதிமன்ற வீதியைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணியின் மகனான எம்.எல்.முன்சித் என்ற மாணவனே இவ்வாறு காணாமல்போன நிலையில் மீட்கப்பட்டுள்ளார். நேற்று(26) பாடசாலைக்குச் சென்ற நிலையில் கடத்தப்பட்டதாகக் கருதப்படும் இம்மாணவன், கடத்தல்காரர்களிடமிருந்து தந்திரமாகத் தப்பித்து, நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்புத் தேடி சரணடைந்துள்ளார்.மீட்கப்படும் போது மாணவனின் உடலில் அடி காயங்கள் காணப்பட்டதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இச்சம்பவம் குறித்து நிட்டம்புவ பொலிஸார் திருகோணமலையிலுள்ள மாணவனின் பெற்றோருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.தகவலறிந்த பெற்றோர் தற்போது மாணவனைப் பார்ப்பதற்காக நிட்டம்புவ நோக்கி விரைந்துள்ளனர்.நேற்று காலை பாடசாலைக்குச் சென்ற மாணவன் வீடு திரும்பாத நிலையில், சமுத்திரகம பகுதியில் அவரது சைக்கிள் மற்றும் புத்தகப்பை என்பன கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையிலேயே, மாணவன் நிட்டம்புவையில் மீட்கப்பட்டுள்ளார்.இதேவேளை, குறித்த மாணவருடன் தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட மற்றொரு தகவல் குறித்து பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.திருகோணமலை பஸ் தரிப்பிடத்தில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட 22 வயதுடைய யுவதி ஒருவர், தனது காதலனுடன் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த யுவதியின் சம்பவத்திற்கும், மாணவன் கடத்தப்பட்ட சம்பவத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை என ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.மாணவன் எதற்காகக் கடத்தப்பட்டார் கடத்தல்காரர்கள் யார் என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ மற்றும் திருகோணமலை பொலிஸார் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement