• Jan 28 2026

நிலாவெளியில் கடை உடைத்து திருட்டு ;முகமூடி அணிந்து கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்!

shanuja / Jan 27th 2026, 4:05 pm
image

​திருகோணமலை - நிலாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒன்பதாம் கட்டைப் பகுதியில் நேற்று (26) இரவு மூன்று கடைகள் உடைக்கப்பட்டு பாரிய திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 


இச்சம்பவம் அப்பகுதி வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


​சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

​நேற்று இரவு சுமார் 9.00 மணியளவில், ஆள் நடமாட்டம் குறைந்த வேளையில் நிலாவெளி ஒன்பதாம் கட்டை சந்தியில் அமைந்துள்ள மூன்று கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு திருடர்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.


இதில் ஒரு மரக்கறி கடையிலிருந்து சுமார் 30,000 ரூபா பணம் திருடப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஏனைய இரண்டு கடைகளிலும் ஏற்பட்ட இழப்புகள் குறித்து மேலதிக விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.


​பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்கள் இன்று(27) இது தொடர்பாகப் பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்யவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். 


அண்மைக்காலமாக நிலாவெளி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகச் சுட்டிக்காட்டும் பொதுமக்கள், பொலிஸார் இரவு நேர ரோந்து நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிலாவெளியில் கடை உடைத்து திருட்டு ;முகமூடி அணிந்து கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் ​திருகோணமலை - நிலாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒன்பதாம் கட்டைப் பகுதியில் நேற்று (26) இரவு மூன்று கடைகள் உடைக்கப்பட்டு பாரிய திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.​சம்பவம் குறித்து தெரியவருவதாவது,​நேற்று இரவு சுமார் 9.00 மணியளவில், ஆள் நடமாட்டம் குறைந்த வேளையில் நிலாவெளி ஒன்பதாம் கட்டை சந்தியில் அமைந்துள்ள மூன்று கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு திருடர்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.இதில் ஒரு மரக்கறி கடையிலிருந்து சுமார் 30,000 ரூபா பணம் திருடப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.ஏனைய இரண்டு கடைகளிலும் ஏற்பட்ட இழப்புகள் குறித்து மேலதிக விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.​பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்கள் இன்று(27) இது தொடர்பாகப் பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்யவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். அண்மைக்காலமாக நிலாவெளி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகச் சுட்டிக்காட்டும் பொதுமக்கள், பொலிஸார் இரவு நேர ரோந்து நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement