ரீச்மீயின் ஏற்பாட்டில், வடக்கு மாகாண ரீதியான கல்வி கண்காட்சியானது எதிர்வரும் தை 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெறவுள்ளதாக ரீச்மீயின் செயற்பாட்டாளர் அஞ்சலிகா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் வருடா வருடம் யாழில் இலவச கல்விக் கண்காட்சியை முன்னெடுப்பது வழமை.
அந்தவகையில் இந்த கல்விக் கண்காட்சியை இம்முறை மிகவும் பிரமாண்டமான வகையில் ஏற்பாடு செய்துள்ளோம்.
சதுரங்க போட்டி, நடன போட்டி, பாடல் போட்டி, திரைப்பட துறை தொடர்பான பயிற்சிகள், உணவுத் திருவிழா, வேலை வாய்ப்புகள், கல்வி கற்பதற்காக புலமைப் பரிசில்களுடன்கூடிய வாய்ப்புகள், வெளிநாட்டு கல்வி வசதி என்பன இந்த கண்காட்சியின்போது இடம்பெறும்.
கல்வியை எவ்வாறு சுவாரஸ்யமான முறையில் மாற்றலாம் என்பதை நாங்கள் இந்த கண்காட்சியின்போது வெளிக்கொணரவுள்ளோம்.
கடந்த காலங்களில் யாழ்ப்பாணமானது கல்விக்கு பெயர்போன இடமாக இருந்தாலும்கூட தற்போது ஒரு சரிவை சந்தித்துள்ளது.
எனவே அதனை மீளவும் கட்டியெழுப்பும் நோக்கில் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளோம்.
க.பொ.த சாதாரண தரம் கற்றவர்கள், க.பொ.த உயர்தரம் கற்றவர்கள் மற்றும் பல்கலைக்கழக கல்வியை தொடர்பவர்கள் என அனைவருக்கும் இந்த கண்காட்சி பயனுள்ளதாக அமையும் என மேலும் தெரிவித்தார்.
யாழில் பல்வேறு துறைகளை உள்ளடக்கி கல்வி கண்காட்சி ரீச்மீயின் ஏற்பாட்டில், வடக்கு மாகாண ரீதியான கல்வி கண்காட்சியானது எதிர்வரும் தை 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெறவுள்ளதாக ரீச்மீயின் செயற்பாட்டாளர் அஞ்சலிகா தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,நாங்கள் வருடா வருடம் யாழில் இலவச கல்விக் கண்காட்சியை முன்னெடுப்பது வழமை. அந்தவகையில் இந்த கல்விக் கண்காட்சியை இம்முறை மிகவும் பிரமாண்டமான வகையில் ஏற்பாடு செய்துள்ளோம்.சதுரங்க போட்டி, நடன போட்டி, பாடல் போட்டி, திரைப்பட துறை தொடர்பான பயிற்சிகள், உணவுத் திருவிழா, வேலை வாய்ப்புகள், கல்வி கற்பதற்காக புலமைப் பரிசில்களுடன்கூடிய வாய்ப்புகள், வெளிநாட்டு கல்வி வசதி என்பன இந்த கண்காட்சியின்போது இடம்பெறும்.கல்வியை எவ்வாறு சுவாரஸ்யமான முறையில் மாற்றலாம் என்பதை நாங்கள் இந்த கண்காட்சியின்போது வெளிக்கொணரவுள்ளோம்.கடந்த காலங்களில் யாழ்ப்பாணமானது கல்விக்கு பெயர்போன இடமாக இருந்தாலும்கூட தற்போது ஒரு சரிவை சந்தித்துள்ளது. எனவே அதனை மீளவும் கட்டியெழுப்பும் நோக்கில் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளோம்.க.பொ.த சாதாரண தரம் கற்றவர்கள், க.பொ.த உயர்தரம் கற்றவர்கள் மற்றும் பல்கலைக்கழக கல்வியை தொடர்பவர்கள் என அனைவருக்கும் இந்த கண்காட்சி பயனுள்ளதாக அமையும் என மேலும் தெரிவித்தார்.